9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி!

தமிழகம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வின்றி 9.10.11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தார். அதேபோல், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்துவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இச்சூழலில், நடப்பு கல்வியாண்டில் 10,11 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவ குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தின் வந்தனர். அதன் அடிப்படையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *