1512 சிறப்பு ரயில்கள் – அசத்தும் ரயில்வே அமைச்சகம்

இந்தியா

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே, நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகளை இயக்குகிறது. மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் ஆகியவற்றின் சேவைகள் இதில் அடங்கும்.  இந்த வழக்கமான ரயில் சேவைகள் தவிர, 2021 ஏப்ரல்-மே மாதங்களில் கோடைகால சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

20.04.2021ம் தேதி வரை,  நாள் ஒன்றுக்கு 1512 சிறப்பு ரயில்களை (மெயில்/எக்ஸ்பிரஸ் மற்றும் விழாக்கால சிறப்பு ரயில்கள்)  இந்திய ரயில்வே இயக்குகிறது.

மொத்தம் 5387 புறநகர் ரயில் சேவைகளும் மற்றும் 981 பயணிகள் ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன. 

21.04.2021ம் தேதி வரை நாடு முழுவதும் பல இடங்களுக்கு தினமும், தில்லியிலிருந்து 53 சிறப்பு ரயில்களையும், மத்திய ரயில்வேயிலிருந்து 41 சிறப்பு ரயில்களையும், மேற்கு ரயில்வேயிலிருந்து 5 சிறப்பு ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்குகிறது. 

12.04.2021ம் தேதியிலிருந்து 21.04.2021ம் தேதி வரை, இந்திய ரயில்வே, மொத்தம் 432 சிறப்பு ரயில் சேவைகளை மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயிலிருந்தும், 1166 சிறப்பு ரயில்களை வடக்கு ரயில்வேயிலிருந்தும் (தில்லி பகுதி) இந்திய ரயில்வே இயக்கியது.

தேவைக்கேற்ப, பல வழித்தடங்களில் இந்திய ரயில்வே தொடர்ந்து சிறப்பு ரயில்களை இயக்கும்.  எந்த குறிப்பிட்ட வழித்தடத்திலும், குறுகிய கால அறிவிப்பில் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முழுஅளவில் தயார் நிலையில் 50.

கொவிட் பரவலை முன்னிட்டு, ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களிடம் கொவிட் நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் இந்திய ரயில்வே எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *