2019 ஆம் ஆண்டின் சிறந்த தருணங்களை பட்டியலிட்டுள்ளது பிசிசிஐ

2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடம், ஒரு நாள் தொடரில் அடித்து நொறுக்கிய ரோஹித், கோலி என கிரிகெட் ரசிகர்களுக்கு இந்திய அணியினர் விருந்து படைத்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில், “2019 ஆம் ஆண்டின் சிறந்த தருணங்கள்” என்று இந்திய அணியினர் செய்த சில சாதனைகளை பட்டியலிட்டுள்ளது. அதில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தர் வீரர் விராட் கோலி (2455 ரன்கள்), ரோஹித் சர்மா (2442 ரன்கள்) என்று தெரிவித்துள்ளது. இதேபோல் ஒரு நாள் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்று முகமது ஷமியையும் (42) விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சாளர் தீபக் சாஹர் என்றும் கூறியுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி, அர்ஜூனா விருது வென்ற ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டவையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் நீங்கள் சிறந்த தருணங்களாக நினைப்பது எது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது பிசிசிஐ. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *