விவசாயிகளுக்கு சலுகை அறிவித்த எடப்பாடி! ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம்

தமிழகம்

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதன்படி, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்புவதே திட்டத்தின் நோக்கமாகும்.

ரூ. 565 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.மேட்டூர் அணையின் உபரி நீர் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி தொகுதிகளில் உள்ள 100 க்கு அனுப்பப்படும்.மேட்டூர் அணையின் நீர் 500 வரண்ட ஏரிகளுக்கு நிரப்புவதால் 4 ஆயிரத்து 238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த விழாவை தொடர்ந்து, திப்பம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும். 5 ஆண்டு காலத்தில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்தது அதிமுக அரசு தான். குறுகிய காலத்தில் விவசாயிகள் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சலுகைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வந்தார். அவ்வகையில் மும்முனை மின்சாரம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்ட நிலையில், தற்போது அது அமலுக்கு வரும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *