28 வயது பெண்ணை திருமணம் செய்த 67 வயது திமுக துணை செயலாளர்.! ஈவேரா, கருணாநிதியை பின்பற்றுவதாக பெருமிதம்.!

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக துணை பொது செயலாளர் 67 வயதுடைய கதிரேசன், 30 ஆண்டுகளுக்கு மேல் திமுகவில் இருந்து வரும் இவர், முன்னாள் அமைச்சர் பிச்சாண்டிக்கு உதவியாளராக ஆரம்ப கட்டத்தில் அரசியல் வாழ்வை தொடங்கியவர் பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் ஏவ வேலு தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் மாறினார், பின்னர் தொடர்ந்து ஒன்றிய செயலாளர், மாவட்ட பொருளாளர், என பல்வேறு பதவிகளை திமுகவில் வகித்த கதிரேசன் தற்போது மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அபிதா என்கிற 28 வயதுடைய பெண்ணுக்கும் இவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்துள்ளது,, பட்டிமன்ற பேச்சாளரான அபிதா நான்கு ஆண்டுகளுக்கு முன் குமரேசனுக்கு அறிமுகமாகிய இவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது, தொடர்ந்து காதலித்து வந்த இவர்கள் அலைபாயுதே படத்தில் வருவது போன்று ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

கதிரேசனுக்கு ஏற்கனவே மனைவி, மகன் மற்றும் மகள் இருக்கின்றனர், இந்நிலையில் பேத்தி வயதில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ள திமுக மாவட்ட துணை செயலாளர் கதிரேசனை, அனைவரும் சமூக வலை தளத்தில் கேலி கிண்டல் செய்து வந்தனர், இது போன்று திமுக தலைவர்கள் இதற்கு முன் நடந்து கொண்டாலும் தற்போதைய காலகட்டத்தில் இது பெரும் சர்ச்சை ஆனதால், தமிழக அரசியலில் இது விவாத பொருளாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து இது குறித்து திமுக மாவட்ட துணை செயலாளர் கதிரேசன் கூறுகையில், தந்தை பெரியார் தனது வயதான காலத்தில் தனக்கு துணையாக மணியம்மையை திருமணம் செய்துகொண்டார், அதே போன்று தலைவர் கருணாநிதி அவர்கள் காலையில் கோபாலபுரம், மாலையில் சிஐடி காலனி என இரண்டு மனைவிகளுடன் என வாழ்ந்தார், நான் அவர்களை பின்பற்றி வந்தவன், அதேபோல் என் மனைவி தரப்பிலும் அபிதா பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து சந்தோசமாக குடும்ப நடத்தி வருகின்றேன்.

இரு மனைவிகளும் சந்தோசமாக இருக்கிறார்கள், இருவர் வீட்டுக்கும் சென்று வருகிறேன் என கதிரேசன் தன் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்தார், இந்நிலையில் 90 கிட்ஸ் பலர் பெண் கிடைக்காமல் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிலாக இருந்து வரும் நிலையில், 67 வயது திமுக மாவட்ட துணை செயலாளர் 27 வயது பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ள செய்தி, 90 கிட்ஸ் தொடர்பு படுத்தி பல மீம்ஸ் சமூக வலைத்தளத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

காயத்ரி ரகுராம் பற்றி ஆபாசமாக அவதூறு பரப்பிய திமுக ஐடி விங் நிர்வாகி.!ஆபாச கூடாரமா திமுக ஐடி பிரிவு.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *