20 ஆம் தேதி நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் – பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார்

அரசியல்

நிதி ஆயோக் அமைப்பின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிப்ரவரி 20ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், வேளாண், உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டசத்து போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

Image result for narendra modi

துறைகளுக்கு இடையேயான விஷயங்கள், மாநிலங்களுக்கு இடையேயான விஷயங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் அளிக்கிறது.

இந்தக்குழுவில் பிரதமர், மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் உள்ளனர்.

6வது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில், முதல் முறையாக லடாக், யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர், இதர யூனியன் பிரதேச நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நிர்வாக கவுன்சில் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *