மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

அரசியல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

J.Jayalalitha எனும் Iron Lady | Happy Birthday | Aadhan Tamil | Episode 2 -  YouTubeஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையில் 73 கிலோ எடைகொண்ட கேக்கை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர்.

நமது புரட்சித் தலைவி அம்மா என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *