மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தல்: அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு

அரசியல் இந்தியா

வன்முறை அபாயம், பதற்றம் காரணமாக, மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் வெளியிட்டார். இதில், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலங்களில் மார்ச் 12 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும், மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

அதேநேரம், மொத்தம் 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், சட்டசபை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல்1, 6, 10, 17, 22, 26, 29 தேதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மார்ச் 27, ஏப்ரல்1 மற்றும் 6 தேதிகளில் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் வன்முறை அபாயம், பதற்றம் உள்ள தொகுதிகள் இருப்பதால், பல கட்டங்களாக தேர்தலை ஆணையம் நடத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *