மன்னிப்பு கேட்க முடியாது மறந்து விடுங்கள் !ஆதாரத்துடன் பெரியாரிஸ்ட்களை தெறிக்க விடும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை வெடித்தது,1971ம் ஆண்டு பெரியார் இந்துக்கள் வழிபடும் ராமரை செருப்பால் அடித்தது பற்றி ரஜினிகாந்த் பேசியதற்கு திராவிட கழகதினர், திருமாவளவன் உட்பட அனைவரும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையெடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்’ பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

மேலும் “நீங்கள் ஒரு பத்திரிகையை காண்பித்து, சொன்னது உண்மைதான் என்று சொன்னாலும், அன்று 1971ம் ஆண்டு அதே கால கட்டத்தில் களத்தில் இருந்தவர்கள் நீங்கள் சொன்னது பொய் என்பதற்கு ஆதாரமாக பல சான்றுகளை வெளியிட்டுள்ளார்களே?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நடிகர் ரஜினிகாந்த் , “அவர்கள், அவர்கள் பார்த்ததை வெளியிடுகிறார்கள். நான் பார்த்ததை வெளியிடுகிறேன்.ஆகையால் இது பற்றி நான் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டேன் நீங்க தான் மீண்டும் கிளறுகிறீர்கள் ,சில சம்பவங்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது, இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்,”என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்,

சின்னவர் “உதயநிதி” ராஜ்யசபா எம்.பி – ஆடத் துடிக்கும் ஸ்டாலின், அடங்க மறுக்கும் கனிமொழி, தயாநிதி மாறன்! உச்சகட்ட குழப்பத்தில் திமுக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *