சினிமா துறையில் மட்டும் சாதிக்காமல் மற்ற துறையிலும் தன் திறமையை காட்ட இருக்கும் தல அஜித்

இந்தியா சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தன்னுடைய வட்டாரங்களில் சமீபத்தில் சினிமா மட்டுமல்லாமல் தனக்கு வேறு சில ஆசைகள் இருப்பதாகவும் அதிலும் சாதிக்க வேண்டுமென ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைக்கு அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் அஜித் முக்கியமானவர். அஜித் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடே திருவிழா போல் ஆகிவிடும். ஒவ்வொரு தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரவாரமாக இருக்கும்.

Valimai first look poster: Ajith fans at their creative best, check out  their stunning works [Photos] - IBTimes India

அந்த வகையில் அஜீத் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் சமீபத்தில் ரசிகர்கள் அஜித்தை கடுப்பேற்றும் வகையில் போகுமிடமெல்லாம் அஜித்தின் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட் கேட்டு கோபமடைய வைத்ததால் அஜித் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான் அதன்பிறகு தல அஜித் தன்னுடைய வட்டாரங்களில் சினிமா மட்டுமே என்னுடைய கனவு இல்லை எனவும், கார் ரேஸ் போன்ற விஷயங்களில் ஜெயித்தது போல துப்பாக்கி சுடும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற வேண்டும் என ஆசைப்படுகிறாராம்

ajith-gun-shooting-photos

கண்டிப்பாக விரைவில் நடக்க இருக்கும் துப்பாக்கி சூடு போட்டியை பற்றி தான் தன்னுடைய முழு கவனம் இருப்பதாகவும், கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெறுவேன் எனவும், இதில் சாதிப்பதே என்னுடைய கனவு எனவும் கூறினாராம் அஜித்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *