வாய்ப்பு இல்லாமல் கதறிய நடிகர் வடிவேலுக்கு பிரபல இயக்குனர் மூலம் அடித்த அதிர்ஷ்டம்…

சினிமா

சமீபத்தில் சில நாட்களாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் பிரபல நடிகர் வடிவேல் தான். ஆம் தற்போது தனக்கு நடிக்க வாய்ப்பு இல்லை என்று புலம்பி சமீபத்தில் கண்ணீர் மல்க காணொளி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு பிரபல டிவி இயக்குனர் படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் பிரபல டிவியில் மெட்டிஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திருமுருகன்.

Thirumurugan (Gopi) Wiki, Biography, Age, Serials, Images - News Bugz

இவர் ஏற்கெனவே நடிகர் பரத்தை வைத்து எம் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் எம் மகன் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி இந்த இரண்டு படங்களிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.

Page 127 of Muniyandi Vilangiyal Moondramaandu Stills, Muniyandi Vilangiyal  Moondramaandu Movie Pictures, Muniyandi Vilangiyal Moondramaandu Photos


இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக விரைவில் திருமுருகன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் காமெடியனாக மீண்டும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *