வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா பாணியில், நிவாரணம் செய்ததாக பித்தலாட்டம் செய்ய நடிகர் விஜய் – பக்கா மாஸ்டர் பிளான்!

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, சாமானிய மக்களும் ஸ்தம்பித்து போய் உள்ளனர். இதில் சினிமா துறையும் தப்பவில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் குமார், நடன இயக்குனர் லாரன்ஸ், நடிகர் சிவகாத்திகேயன் போன்ற நடிகர்கள், மத்திய மற்றும் மாநில அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். மேலும் சினிமா துறையை சேர்ந்த தொழிலாளர் சங்கங்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சினிமாவில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க சொல்லி வசனம் பேசி ஒரு படத்திற்கு 80 சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், இதுவரை ஏன் நிவாரணம் வழங்கவில்லை? என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நடிகர் விஜய் தரப்பில் இருந்து இதுவரை இதுகுறித்து யாரும் வாய் திறக்கவில்லை. மாறாக கனடாவில் இருக்கும் தனது மகன் கொரோனா காரணமாக இந்தியா வரமுடியாமல் அங்கே சிக்கியுள்ளதால் நடிகர் விஜய் சோகத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவனாண்டி கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் மகளாக நடித்த ஸ்ரீதேவி திருமணம் நின்றுவிடும். அப்பொழுது ஒரு வயதான பாட்டி ஒரு கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் நின்று விட்டது, என்று அந்த படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியிடம் கூறுவார். அதற்கு சிவகார்த்திகேயன் ஒரு கோடி நீ பார்த்தியா என கேட்க, அதற்கு ஆமப்பா ஒரு கோடிப்பு என அந்த வயதான பாட்டி கூறுவார். அதற்கு சூரி இதெல்லாம் அந்த சிவனாண்டி கிளப்பி விடுற வேலை தான் என்பார்.

இந்த சினிமா பாணியில் தற்போது நடிகர் விஜய், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தனது ரசிகர் மன்றம் மூலம், சிறு நிவாரண பணிகளை மேற்கொண்டு, 5 கோடி மதிப்பில் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பணிகளை மேற்கொண்டார், என தம்பட்டம் அடிக்க விஜய் பக்கா மாஸ்டர் பிளான் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற நடிகர்கள் போல் நிவாரண நிதி வழங்கினால் வெளிப்படை தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதால், தனது ரசிகர் மன்றம் மூலம் இந்த வழியை பின்பற்ற உள்ளதாக தெரிகிறது. மேலும் மாஸ்டர் படம் வெளியாகும் தேதி கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அந்த திரைப்படத்தை வாங்கிய வினியோஸ்தகர்கள் பணத்தை திரும்ப கேட்டு நடிகர் விஜய்யை தொல்லை கொடுப்பதால் அவர்களுக்கு பதில் தரமுடியாமல் நடிகர் விஜய் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினை ஓவர் டேக் செய்த கனிமொழி. இரண்டு நாட்களுக்கு பின் களத்தில் இருந்து காணாமல் போன மர்மம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *