தொகுதிப் பங்கீடு: அதிமுக – பாஜக தலைவர்கள் மீண்டும் பேச்சு

அரசியல் தமிழகம்

தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, பாஜக – அதிமுக தலைவர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில், பாமகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து பாஜக, தேமுதிகவுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து, தமாகாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று தெரிகிறது.

இச்சூழலில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக தலைவர்கள், 3வது நாளாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில், அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் எல்.முருகன், கிஷண் ரெட்டி, கேசவ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரனின் அமமுகவை சேர்க்க வேண்டும் என்று பாஜக விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், இன்றைய பேச்சு வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *