நெஞ்சம் மறப்பதில்லை – மாஸ்டர் பீஸ் செல்வராகவன்..

சினிமா

கிட்டத்தட்ட 4 வருட காத்திருப்புக்குப் பிறகு செல்வராகவன் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக வந்துள்ளது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம். இதுவரை வந்த செல்வராகவன் படங்களில் இது தான் மாஸ்டர்பீஸ் எனும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.கிட்டத்தட்ட 4 வருட காத்திருப்புக்குப் பிறகு செல்வராகவன் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக வந்துள்ளது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம். இதுவரை வந்த செல்வராகவன் படங்களில் இது தான் மாஸ்டர்பீஸ் எனும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் நடிப்பில் மிரட்டலாக வெளிவந்திருக்கும் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பைனான்ஸ் பிரச்சனையில் மாட்டி சிக்கியது.

Nenjam Marappathillai Songs Review | Yuvan Shankar Raja, Selvaraghavan, SJ  Surya | 2016 - YouTube

தற்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு இன்று வெளியாகியுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகப் போகிறது என்று அறிந்த உடனேயே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. இடையில் கூட படம் வெளிவருமா? வராதா? என்ற சிக்கல்களை சந்தித்து தற்போது ஒரு வழியாக திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிவிட்டது.

மேலும் ரசிகர்களும் முன்னணி நடிகர்களின் படங்களை போல கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கு உரிமையாளர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிகிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும், நந்திதா ஸ்வேதாவுக்கு அழுத்தமான வேடம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா படத்தின் தூணாக உள்ளார் எனவும் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *