ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்..

சினிமா

ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் அதை விட அதிகமான படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. விடிவு காலம் வராதா என எதிர்பார்த்த விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படம் வரப்பிரசாதமாக வந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

I am like a kid whenever I stand in front of the camera: Vijay Sethupathi |  Entertainment News,The Indian Express

இதன் காரணமாகவே விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே உருவாக்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை இரண்டு மாத இடைவெளியில் நான்கு படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள்

அந்த வகையில் தமிழ் புத்தாண்டுக்கு துக்ளக் தர்பார், ஏப்ரல் மாத இறுதியில் பேராண்மை படத்தை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லாபம், மே மாதத்தில் யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் நான்கு வருடமாக கிடப்பில் கிடக்கும் மாமனிதன் போன்ற படங்களும் தொடர்ந்து வெளியாக உள்ளன.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சமீபத்தில் விஜய் சேதுபதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்ததால் அவருடைய பழைய படங்களான சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *