ஆறுமாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட காதல் சின்னத்தின் கதவுகள்

இந்தியா

கடந்த ஆறு மாதகாலமாக கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மீண்டும் கடந்த திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

File:Taj-Mahal.jpg - Wikimedia Commons

தினசரி அதிகபட்சமாக 5 ஆயிரம் பேருக்கு அனுமதியளிக்கப்படுவார்கள் . பார்வையாளர்களை இரு வரிசைகளாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் கொரோனா பீதி காரணமாக கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. முதல் நாளில் ஆன்லைன் மூலம் 160 பேர் மட்டுமே முன்பதிவு செய்தனர். பிரதான முகப்பில் நுழைய இருநூறு ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதும் கூட்டம் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

ஆறுமாதங்களாக வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தாலும் முறையாக பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *