ஸ்டாலினை ஓவர் டேக் செய்த ஆ.ராசா.! இனி பேட்டி ஏதும் கொடுக்க கூடாது என திமுக தலைமை உத்தரவு.!

திமுகவில் திறமையான பேச்சாளராக திகழ்கின்றவர் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா. எந்தவொரு கேள்வியாக இருந்தாலும் உடனே பதிலளிக்க கூடியவர் தான் ராசா. ஆனால் திமுக தலைவராக இருக்க கூடிய ஸ்டாலின் பொது மேடையில் துண்டு சீட்டைப் பார்த்து கூட தப்பு தப்பாக பேசுவது, பழமொழியை தவறாக பேசுவது, போன்று தொடர்ந்து செயல்படுவதால் மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை கேலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, கந்த சஷ்டி குறித்து ஆபாசமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிய கறுப்பர் கூட்டம் விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில்: பெரியார் தான் எங்களுக்கு முக்கியம், கந்த சஷ்டி கவசம் எங்களுக்கு முக்கியமில்லை. மேலும் இந்து என்கிற மதமே கிடையாது, முஸ்லிம்களின் புனித நூல் குரான் போல, கிறிஸ்துவர்களின் புனித நூல் பைபிள் போன்று, இந்துக்களுக்கு ஏதாவது ஒரு புனித நூல் இருக்கிறதா என இந்துக்கள் மனம் புண்படும்படி பேசினார்.

மேலும் கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் யார் மனதும் புண் படவில்லை எனவும் பேசினார். இவர் பேசிய பேச்சு ஏற்கனவே திமுகவுக்கு எதிராக கொந்தளிப்பில் இருக்கும் இந்துக்கள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் திராவிட சித்தாந்தம் கொண்டவர்கள், பெரியாரிஸ்ட், மற்றும் திமுகவை சேர்ந்த சிலர் ஆ.ராசா பேட்டிக்கு புகழாரம் சூட்டினார்கள். கருணாநிதி, ஈவேரா, மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு இணையாக கொண்டாடினார்கள்.

இந்த கொண்டாட்டத்தின் உள்ளே ஊடுருவிய திமுக எதிர்ப்பாளர்கள், இப்படி திறமை மிக்க ஒருவர் இருக்கையில் துண்டு சீட்டை பார்த்து கூட தப்பு தப்பாக உளறும் ஒருவர் ஏன் திமுகவின் தலைவராக இருக்க வேண்டும்? ஆ.ராசாவுக்கு தலைமை பொறுப்பை வழங்க வேண்டும் என கொளுத்தி போட்டனர். இந்நிலையில் பெரியாரிஸ்ட், திக, மற்றும் திமுகவினர் அனைவரும் திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவியை ஆ.ராசாவுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்த தொடங்கினர்.

ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவி ஆசையில் இருக்கும் ஆ.ராசாவே தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு இதை திட்டிமிட்டு பரப்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் தான் என உறுதி செய்யப்பட்டு காத்திருக்கையில், இந்த விவகாரம் துரைமுருகனை அப்செட் செய்தது. இதனைத் தொடர்ந்து துரைமுருகன் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு, திறமைமிக்க ஆ.ராசா திமுக தலைமையை ஏற்க சரியான நபர் என ஸ்டாலினுக்கு எதிராக இந்த விவகாரத்தை திசை திருப்பினார்.

மேலும் ஆ.ராசா பேட்டிக்கு பின் ஸ்டாலின் வெளியிடும் அறிக்கை, உதயநிதி ஸ்டாலின் கூறும் கருத்துக்கள் அனைத்தும் திமுகவினர் மத்தியில் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஆ.ராசாவை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் திமுக உடன்பிறப்புகள். மேலும் ஒருபக்கம் ஆ.ராசா தான் தலைமைக்கு சரியான நபர் என்று குரல் ஓங்கி ஒலிக்க, கடும் அப்செட் ஆன திமுக தலைமை, இனி கட்சியில் யாராக இருந்தாலும் கட்சி தலைமை அனுமதி வழங்கினால் மட்டுமே தொலைக்காட்சியில் பேட்டி நேர்காணலில் பங்கு பெற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.

நிலையிலான குடியரசு அரசாட்சி முறையே இராமராஜ்யம்.! ”கோயிலைத் திரும்பக் கட்டுதல் என்ற தலைப்பில்17 மொழிகளில் வெளியிட்ட குடியரசுத் துணைத்தலைவர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *