விவசாய கடன் தள்ளுபடி – விவசாயிகளை திமுக ஏமாற்றியது எப்படி?

2006 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்வதாக திமுக அறிவித்தது. 4000 கூட்டுறவுச் சங்கங்களில் எடுக்கப்பட்ட மொத்த கடன்கள் ₹6526 கோடி. 2007 ஆம் ஆண்டில், அன்றைய நிதித் துறை அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு கடன்கள் கூட்டுறவு நிறுவனங்களுக்கு 5 தவணைகளில் 8 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று கூறினார்.

வழக்கம்போல் சொல்வதொன்று செய்வதொன்று என்ற தனது கொள்கையில், கூட்டுறவு வங்கிகளுக்குப் பாக்கியை திமுக செலுத்தவில்லை. இவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற UPA அரசிடம் ₹5000 கோடி நிதி கேட்டுச் சென்றனர். மோசமான முன்னுரிமையை அமைக்க விரும்பாத மத்திய அரசு, அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை.

2008 ஆம் தொடக்கத்திலும், வங்கிகளுக்கு நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை. 2009 மக்களவை தேர்தலுக்கு முன்னர், UPA சர்க்கார் 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ₹6526 கோடி உட்பட 60,000 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

2016 ஆம் ஆண்டில், அதிமுக அரசு 6,095 கோடி விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தது. வங்கி அளித்த அறிக்கையில், 80% கடன் தொகை 2006 ஆம் ஆண்டிலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தும் அன்று வரை வங்கிகளுக்குத் திருப்பி செலுத்தப்படாமல் இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Post-Karunanidhi, Tamil Nadu politics hit uncertain times | ORF

திமுக மற்றும் காங்கிரஸ் கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை, மக்களை ஏமாற்றினார்கள் என்று தெளிவாக தெரிகிறது. பத்து ஆண்டுகள் வங்கிக்குப் பணம் திருப்பி தராத போது, வங்கியால் மீண்டும் கடனுக்கான பணப்புழக்கத்தை உருவாக்க முடியாது. 2006க்கு பிறகு தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அழிக்கப்பட்டது.

வாராக் கடனால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 2016 வரை புதிய கடன் அளிக்கப்படவில்லை. 2017க்கு பிறகுதான் விவசாயம் பழைய நிலைமைக்குத் திரும்பியுள்ளது. வரும் தேர்தலிலும், திமுக நமது கடன்களைத் தள்ளுபடி செய்வதாகக் கூறினால், அது எப்படி இருக்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Outlook India Photo Gallery - DMK-Congress alliance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *