அக்காவுக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும்.!ஸ்டாலினுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை தூண்டும் கனிமொழி.!

இரு தினகளுக்கு முன் திமுக பொது குழு அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் கூடியது, அதில் பொது செயலாளராக துரைமுருகன், பொருளாளராக TR பாலு ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர், ஆனால் ஏற்கனவே பொது செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைந்த போது, திமுகவின் பொது செயலாளர் அதிகாரம் திமுக தலைவருக்கு மாற்ற பட்டது, தற்போது புதிய பொது செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்க பட்டுள்ள நிலையில் தலைவரிடம் இருக்கும் பொது செயலாளருக்கான அதிகாரத்தை இதுவரை பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு வழங்க படவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே திமுகவின் துணை பொது செயலாளராக 3 பேர் இருந்து வரும் நிலையில் கூடுதலாக பொன்முடி மற்றும் ஆ.ராசா நியமிக்கப்படுவதாக திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதன் பின்னனியில் பாஜக மாநில தலைவராக பட்டியல் சமூகத்தை சேர்ந்த எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின், திமுகவின் சமூக நீதி பற்றி கடுமையான விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து ஆ.ராசா துணை பொது செயலாளராக நியமிக்கும் நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் தனக்கு முக்கிய பதவி கொடுக்க வேண்டும் என தொடர்ந்து ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்த பொன்முடிக்கு உறுதி அளிக்காமல் ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நடத்த காணொளி கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பொன்முடி புறக்கணித்து வந்த நிலையில், அவரை சமாதான படுத்த கூடிய கட்டாயத்துக்கு முக ஸ்டாலின் தள்ளப்பட்டதால், பொன்முடிக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்க பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொது குழு முடித்த சில மணி நேரத்தில் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி ஓன்று உருவாக்கப்பட்டு முக அழகிரிக்கு வழங்கியது போன்று, அக்கா கனிமொழிக்கு தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்க பட வேண்டும் என கனிமொழி ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர், தென் தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற அக்கா கனிமொழி முக்கிய பங்கு வகித்தார் என்றும்.

மேலும் ஸ்டெர்லைட் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், என அனைத்தையும் முன்னெடுத்து செல்லும் அக்கா கனிமொழி அவர்களை தெண் மண்டல அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என கனிமொழி ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர், இதற்கு பின்னனியில் கனிமொழி இருப்பதாகவும், அவர் தான் தனது ஆதரவாளர்களை ஸ்டாலினுக்கு எதிராக தனக்கு பதவி வழங்க தூண்டி விடுவதாக கூறப்படுகிறது.

காதலன் ஏமாற்றிய சோகத்தில் த்ரிஷா…கரம் பிடிக்கும் சிம்பு.! கொரோனா உரடங்கில் வளர்ந்த காதல்.. விரைவில் டும்..டும்..டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *