பள்ளிகள் அனைத்தும் மூட பள்ளிக்கல்வித்துறை மீண்டும் உத்தரவு!..

இந்தியா தமிழகம்
When will schools, colleges reopen? Here's clarification from Centre

புதுச்சேரியில் சில பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து பள்ளிகளையும் மூட பள்ளிக்கல்வித்துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்ததால் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31-ம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்தது. இருப்பினும் இதனை மீறி சில பள்ளிகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூடவும் கல்வி வாரியத் தேர்வெழுதும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வகுப்புகள் நடக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *