அனைவருக்கும் பொங்கல் பரிசு – அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி

பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 6 லட்சம் குடும்பம் என்பது 2 கோடியே 7 லட்சமாக உயர்ந்துவிட்டது. முதல்வர் சீனி கார்டுகளை மாற்றக்கூறியதால் ஒரு லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அத்தனை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

Government issue regarding Pongal prize money of Rs. 2,500 || பொங்கல் பரிசு  தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியீடு
மதுரை கீழவெளிவீதியில் தூய மரியன்னை மேல்நிலைபள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர செல்லூர் ராஜு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வகுமாரி, மதுரை வடக்கு தொகுதி எம் எல் ஏ ராஜன்செல்லப்பா, பள்ளி தாளாளர் ஸ்டீபன்ராஜ் உட்பட ஆசிரியரகள் மாணவர்கள் கலந்துகொண்டனர்,அதனையடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 6 லட்சம் குடும்பம் என்பது 2 கோடியே 7 லட்சமாக உயர்ந்துவிட்டது. முதல்வர் சீனி கார்டுகளை மாற்றக்கூறியதால் ஒரு லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அத்தனை கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.எந்த நியாயவிலைக்கடைகளிலும், எங்கும் பிரச்சனை இல்லை. அனைத்து நியாயவிலைக்கடைகளை ஆய்வு செய்ய உள்ளேன்.சரியாக பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வேன்.

அமித்ஷா வருகையின் போது அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இறுதி செய்யப்படுமா என்ற கேள்விக்கு,அமித்ஷா துக்ளக் விழாவிற்கு தான் வருகிறார். இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டாம்.அவருடைய நிகழ்வு நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். அவர் வந்த பிறகு தான் தெரியும்.

நியாயவிலைக்கடைகளில் டோக்கன் கொண்டுவந்தால் தான் பரிசு தொகுப்பு கொடுப்போம் என்ற நிலை இல்லை. பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக தான் அரசியல் செய்யும். 2010ஆம் ஆண்டு தேர்தலை ஒட்டி பொங்கல் வரிசை திமுக வழங்கியது. ஆனால் நாங்கள் வழங்கும் பரிசுத்தொகுப்பில் இரட்டை இலை சின்னமோ, ஜெயலலிதா படமோ நாங்கள் போடவில்லை,திமுக ஆட்சியில் தான் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறைகூறுகின்றனர்.நிரந்தரமான நடிகராக கமலஹாசன் தேவை. அவரை பலிகடா ஆக்க வேணாம். அவர் அரசியலை சூட்டிங் போல நினைக்கிறார்.

எதைத்தான் நல்லதாக ஸ்டாலின் கூறியுள்ளார்,ஜல்லிக்கட்டுப்போட்டியில் சூழலுக்கேற்ப முதல்வர் கலந்துகொள்வது குறித்து முடிவெடுப்பார்.

நாம் அனைவரும் வெளியே இருந்து தான் ஸ்டாலினைப் பார்க்கிறோம். அழகிரி கூடவே வளர்ந்த தம்பி ஸ்டாலின். தம்பியுடைய திறமை, ஆற்றல் என்னவென்று அண்ணனுக்கு தான் தெரியும், மு.க.அழகிரியே ஸ்டாலினை முதல்வராக முடியாது என கூறிவிட்டார்,மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை தான் முதல்வராக எண்ணுகிறார்கள். எல்லா மத்தவரும் முதல்வரின் நடவடிக்கையை கண்டு ஆதரவு அளித்து வருகின்றனர். அனுமதி வாங்கி முதல்வரை சந்திக்க உள்ள நிலையில் முதல்வரே நேரே சென்று எல்லோரையும் சந்திக்கிறார். எல்லா தரப்பு மக்கள் மனங்களையும் முதல்வர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *