அமெரிக்காவின் ஆயுத அரசியல் – பாதிக்கப்படும் மத்திய கிழக்கு தேசங்கள்

உலகம்

இரண்டாம் உலகப் போரின் போக்கை இருவர் தீர்மானித்தனர். ஒருவர் அடால்ப்ஹிட்லர். இவர் கையில் எடுத்தது யூத எதிர்ப்பு. அவரது பாணியில் சொன்னால் துடைத்து எறிவது. சொன்னதோடு செய்யவும் செய்தார். யுத்த காலத்தில் இந்த மொத்த உலகில் இறந்தவருக்கு சமமாக இவர் யூதர்களை கொன்று இருக்கிறார். இரண்டாமவர் ஆல்பர்ட்ஐன்ஸ்டீன். E = mc² எனும் சூத்திரத்திற்கு சொந்தக்காரர். அது மட்டுமல்ல ஜப்பானிய நாகாசாஸி ஈரோஷிமா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கு மூலக் காரணமாக இருந்தது இவரது கண்டுப்பிடிப்பு. இதன் பிறகே உலகப் போர் முடிவுக்கு வந்தது என்கிறது சரித்திரம். இவரும் ஒரு யூதர் என்பது தான் இதில் உள்ள நகைமுரண்.

யூதர்கள் மீதான வரம்பற்ற தாக்குதல் இன்றைய இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்தது. பெரிய பிரதேசம் எல்லாம் இல்லை அது, 22,145 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குட்டி நாடு. நம் பக்கத்தில் உள்ள கேரளா மாநிலத்தை விட மிகச் சிறியது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கான ஆகச் சிறந்த உதாரணம் இவர்கள் தான். அப்படி தான் அந்நாட்டை நிர்வகிக்கிறார்கள். இதற்கான மெனக்கெடல் கொஞ்சம் நஞ்சம் அல்ல. சுற்றிலும் அரபு தேசங்கள், அதிலும் பெரிய அளவிலான பிரதேசங்களை கொண்டு நாடுகள் அவை. ஆனாலும்கூட அந்த இஸ்லாமிய நாடுகளால் இஸ்ரேலை ஒன்று செய்துவிட முடியவில்லை இன்றைக்கு வரைக்கும்.

இஸ்ரேலை உருவாக்க அமெரிக்கா துணை நின்றது உண்மை தான், ஆனால் அதை தாண்டி பெரிய அளவிலான உதவிகளை அமெரிக்கர்கள் செய்து கொடுக்க வில்லை. இவர்களாகவே தான் அந்த பாலைவன பூமியில் கையூன்றி எழுந்து நிற்கிறார்கள், போதாக்குறைக்கு அமெரிக்காவிற்கு சமயத்தில் உதவி கூட செய்கிறார்கள். தற்போது கூட செய்து இருக்கிறார்கள், அமெரிக்காவிற்கு. அதுவும் மிகப் பெரிய உதவி. ஜோபைடன் தனது பராக் ஒபாமா காலத்திய கொள்கைகளை ஈரானிய உறவுகளில் காட்டி வெண்சாமரம் வீச அவர்களோ பைடனுக்கு பெப்பே காட்ட நொந்து போனார் மனிதர். இடைப்பட்ட காலத்தில் நீண்ட நெடுங்காலமாக ஈரான் மீதான பொருளாதார தடையை விலக்க வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்தனர். இல்லை என்றால் ஈரான் யுரேனிய செறிவூட்டல் நடவடிக்கைகளில் இறங்குவோம் என்று பகிரங்கமாகவே எச்சரிக்கை செய்து காலக்கெடு விதித்தனர்.

அமெரிக்காவின் பொருளாதார தடையே ஒரு தலை பட்சமானது என்ற போதிலும், ஈரானின் இவ்விதமான டீலிங்கை உலகம் ரசிக்கவில்லை. போதாக்குறைக்கு இந்த நடவடிக்கைகளால் இஸ்ரேலை வேறு முறைத்துக் கொண்டது அமெரிக்கா. ஜோபைடனின் ராஜதந்திர தோல்வியாக இது பார்க்கப்பட்டாலுமே கூட, இதில் இருந்து மீள வழி தெரியாமல் தத்தளித்து அமெரிக்கா. விலகி இருந்த இஸ்ரேல் களம் இறங்கியது. அவர்களுக்கு இஃது தனது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை, அதனால் வருகிறார்கள். ஈரானில் எங்கு வைத்து எந்த அணு செறிவூட்டல் செய்யப்போவதாக சொன்னதோ அதே இடத்தில் வைத்து தொழில்நுட்ப இயந்திரங்களை முற்றிலும் அழிந்து விட்டது. வெளிப்பார்வைக்கு அது விபத்து, ஆனால் எல்லோருக்கும் தெரிந்தது இது இஸ்ரேலிய வேலை என்று. இதனால் இரு நாடுகள் பயனடைந்தது. ஒன்று இஸ்ரேல் மற்றோன்று அமெரிக்கா.

எதைக் காட்டி பேரம் பேசினார்களோ அந்த செறிவூட்டலுக்கு குறைந்த பட்சம் 9 மாதங்களாவது ஆகும்; அவ்வளவு சேதாரம். இந்த அணு உலைக்கு குண்டு வைத்தது “ரேஸாக் கரிமி” எனும் ஈரானியர் தான் என்று ஈரானே ஒப்புக் கொண்டுள்ளது வேறு விஷயம். ஈரானிய அணு விஞ்ஞானி தந்தையாக கொண்டாடப்பட்ட Dr. மோஸின்_பஃகிரிஸாதே வை கடந்த நவம்பரில் பாதுகாப்பு படையினர் கூட இருக்கும் போதே போட்டுத் தள்ளி இருக்கிறார்கள். இவையெல்லாம் அந்த பிராந்தியத்தில் எந்த ஒரு அரபு தேசமும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது என்கிற கொள்கை முடிவை கொண்டு இருக்கிறார்கள் இஸ்ரேலியர்கள்.

சரி அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் மட்டுமா பிரச்சினை என்றால் அது தான் இல்லை. தற்போது துருக்கி வீறுக்கொண்டு வளர்ந்து வருகிறது. அதற்கும் அமெரிக்கா ஓர் வகையில் காரணம். துருக்கி அதிபர் எர்டொகனுக்கு பரந்து விரிந்து இஸ்லாமிய தேசம், அதற்கு தான் தலைவன் என்கிற அவரது கனவு மிகப் பெரியது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் ஊடாக கஜகஸ்தான் துருக்மெனிஸ்தானை தாண்டி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள உய்கூர் வரை நீள்கிறது அவரது ஆசை. துருக்கி அதிபர் எர்டொகனுக்கு தனது தேசம் மீண்டும் ஓட்டோமான் பேரரசு போல அமைய வேண்டும் என்கிற ரீதியில் இயங்கி வருகிறார். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தடையாக தெரிகிறார் அவருக்கு.

காஷ்மீர் பிரச்சினையில் அதற்காகவே மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக் கொண்டார். இந்தியா என்பது உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதி. அவரளவில் அவருக்கு இந்தியா வேண்டாம், ஆனால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் வேண்டும். அவர்களின் நிதி சேவைகள் வேண்டும். இது அவர்களின் கடமை என்று சீரியஸாக விவாதங்களை முன் வைக்கிறார். இதனாலேயே மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கும் அவருக்கும் முட்டிக் கொண்டது. பிரச்சினைக்குரிய அனைத்து இடங்களிலும் அமெரிக்கா வருகிறது. அல்லது அமெரிக்க வரும் காலங்களில் பிரச்சினை வருகிறது. ஆனால் நிஜத்தில் அமெரிக்கா இங்கு வருவது அதன் ஆயுத தளவாட விற்பனைக்காக. ஈராக்கில் அணு ஆயுத சோதனை என்ற பெயரில், சமயத்தில் ஏகத்துக்கும் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்து இருக்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு ஆயுத தளவாட விற்பனை என்பது அவர்களின் பழைய ஆயுதங்களை கழிவு விலையில் தள்ளிவிட ஒரு தேசம். பாகிஸ்தானை காட்டி ஆஃப்கானிஸ்தானில் ஏகப்பட்ட சரக்குகளை தள்ளி விட்டு இருக்கிறார்கள். இவ்விரண்டு தேசதற்கும் பாதி விலைக்கு பாதி நன்கொடை என்கிற ரீதியில். அன்றைய சோவியத் யூனியனாக இருந்த சமயத்தில் இருந்தவர்கள் இப்போது தனித்தனி தேசங்களாக மாறியிருக்கும் பிரதேசங்களில் எல்லாம் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆயுதங்கள் இருப்பதாலேயே கலவரம் செய்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இப்படி இந்த வலையில் இருப்பது ஒன்றிரண்டு தேசங்கள் அல்ல. சற்றேக்குறைய 23 தேசங்கள். இதில் சமீபத்திய நாட்களில் செய்திகளில் அடிபடும் பெயர் உக்கிரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *