மார்ச் 7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை: குமரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்

அரசியல் தமிழகம்

தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றியை தேடித்தரும் பொருட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 7ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்; கன்னியாகுமரில் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஒருமாத அவகாசமே உள்ளதால், தமிழக அரசியல் களம் சுறுசுறுப்படைந்துள்ளது. தொகுதி பங்கீடு, தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட தேர்தல் பணிகளில், அதிமுக – திமுக இரண்டும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு இம்முறை அதிகளவில் பாஜகவினரை அனுப்ப வேண்டும் என்ற முடிவோடு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படி தமிழக பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பிரசாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வந்து பிரசார கூட்டங்களில் பங்கேற்றுவிட்டு சென்றுள்ளனர். அவர்களின் வருகைக்கு பிறகு தமிழக பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமிஷா, கடந்த 28ம் தேதி தமிழகம் வந்தார். அவர் விழுப்புரம் மற்றும் காரைக்காலில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்நிலையில் அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகிறார். அதன்படி, வரும் 7ம் தேதி கன்னியாகுமரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *