மாணவி தற்கொலையில் திமுக அரசியல்.! உண்மையை உரக்க சொன்ன இயக்குனர் சேரன் கருத்து.!

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி, நீட் தேர்வுக்காக படித்து வந்தார். 19 வயதான மாணவியின் தந்தை முருகசுந்தரம் காவல் சார்பு ஆய்வாளராக உள்ளார். இந்நிலையில் தேர்வு அச்சம் காரணமாக ஜோதி ஸ்ரீ துர்கா இன்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன், மாணவி ஜோதிஸ்ரீ பேசிய உருக்கமான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாணவி தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்ய தொடங்கியுள்ளது, திமுக எம்பி கனிமொழி தனது டிவீட்டர் பக்கத்தில், நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர்..நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் ? என திமுக எம்பி கனிமொழி மாணவி தற்கொலையில் அரசியல் செய்ய தொடங்கியுள்ளார்.

இதே போன்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற செய்ய முயற்சிக்காமல் தொடர்ந்து மாண்வர்கள் தற்கொலையை அரசியல் செய்து வருகிறது திமுக, மாணவி தற்கொலை குறித்து பாஜக மாநில துணை தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் தனது டிவீட்டர் பக்கத்தில், ஒரு இளம்தேவதையின் மரணம் மனதை உலுக்குகிறது. துன்பங்களும், தடைகளும் இல்லாத வாழ்க்கை ஏது? எனதருமை குழந்தைகளே !தன்னம்பிக்கை மரணத்தை விட வலிமையானது என உணருங்கள்.

மேலும், டாக்டர்அம்பேத்கர்,மாமேதை கலாம் வாழ்க்கையை படியுங்கள். ஊக்கமே மருந்து.என வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார், மேலும் இயக்குனர் சேரன் தனது டிவீட்டர் பக்கத்தில்,படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள் என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

அக்காவுக்கு முக்கிய பதவி வழங்க வேண்டும்.!ஸ்டாலினுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை தூண்டும் கனிமொழி.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *