அதிமுக அணியில் பாமகவிற்கு தொகுதி எண்ணிக்கை குறைந்தது ஏன்?

அரசியல்

அதிமுக அணியில் பாமகவிற்கு தொகுதிகள் குறைந்தது ஏன் என்பதற்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதால், தொகுதிகளை குறைத்து கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு குறைந்த அவகாசமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை வேகப்படுத்தி உள்ளன. அதிமுக கூட்டணி முந்திக் கொண்டிருக்கிறது. முதலில் பாஜகவுடன் பேச்சு நடத்திய அதிமுக தலைவர்கள், பின்னர் பாமகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

பேச்சு வார்த்தையின் முடிவில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டதால், எங்களுக்கான தொகுதிகளை குறைத்து கொண்டோம். அதிமுக – பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி, பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி குறைத்து பெற்றிருந்தாலும் பாமகவின் பலம் குறையாது. வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தீர்வு கிடைத்துள்ளது என்றார்.

பாமகவுக்கு ஒதுக்கப்படும் 23 தொகுதிகள் எவை என்பது ஓரிரு நாளில் அறிவிப்பட்டும் என்று அதிமுக – பாமக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *