அண்ணாமலை IPS அதிரடி.! விளம்பரம் தேட முயற்சித்து அந்தர் பல்டி அடித்து குப்புற விழுந்த திமுக எம்பி செந்தில்குமார்.!

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் சமூக ஊடகங்களில் தொடர்ந்து யாருடனாவது வம்பிழுத்து பொழுதை கழித்து வரக்கூடியவர், கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொடங்கத்தில் தனது தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதை தவிர்த்து விட்டு, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக அரசை குறை கூறி வந்தார்,இதனை தொடர்ந்து நீங்கள் உங்க தொகுதி மக்களுக்கு என்ன செய்திர்கள் என பொது மக்களும், வலைதளவாசிகளும் வெளுத்து வாங்கியதை தொடர்ந்து, கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது ஒரு மருத்துவரான திமுக எம்பி செந்தில்குமார் முக கவசம் அணியாமல் கூட மருத்துவமனையை ஆய்வு செய்து புகைப்படம் வெளியிட்டிருந்தது பெரும் கேலி கிண்டலுக்கு ஆளானது.

மேலும் அன்புமணி ராமதாஸ் கையில் வரையப்பட்ட டாட்டோ புகைப்படத்தை பதிவு செய்து பாமக தொண்டர்களுடன் வம்பிழுத்து சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பொழுதை கழிப்பது, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், ரஜனிகாந்த் ரசிகர்கள், என தொடர்ந்து அதிக நேரங்களை சமூக வலைத்தளத்தில் ஒவ்வொருவருடன் வம்பிழுத்து திமுகவை தொடர்ந்து சிக்கலில் சிக்க வைத்து, தேரை இழுத்து தெருவில் விட்ட கதையை போன்று திமுக தலைமையை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுவார் திமுக எம்பி. செந்தில்குமார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக எம்பி செந்தில் குமார், மும்மொழி கொள்கை பற்றி பாஜக துணை தலைவர் அண்ணாமலை IPS தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், திமுக தலைவர்களுடன் இது குறித்து நேரடியாக விவாதம் நடத்த தாயார் என தெரிவித்திருந்தார், இந்த நிகழ்ச்சி நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அண்ணாமலை IPS சவாலை ஏற்பதாக தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்த திமுக எம்பி செந்தில்குமார் அதற்கான நேரத்தையும், தேதியையும் உறுதி செய்ய அண்ணாமலை IPSக்கு கோரிக்கை விடுத்தார் செந்தில்குமார் எம்பி.

இதனை தொடர்ந்து அண்ணாமலை IPS செப்டம்பர் 19,20,26, மற்றும் 27 ஆகிய தேதிகளும், அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளை பரிந்துரை செய்தாவர், இதில் எந்த தேதியை தேர்வு செய்ய போகிறீர்கள் என அண்ணாமலை IPS எழுப்பிய கேள்விக்கு செந்தில்குமார் எம்பி தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை, மேலும் இவர்கள் இருவரும் பங்குபெறும் விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட முன்னணி நெறியாளர் அனைவரும் ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

விவாத நிகழ்ச்சி நடைபெறுவது உறுதி செய்யப்படும் தருவாயில் இருந்த நிலையில், திமுக எம்பி தீடிரென ஜர்க் ஆகி அந்தர் பல்டி அடித்து விவாதத்தை எதிர்நோக்கி இருந்த மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளார், அண்ணாமலை IPS தேதிகளை வெளியிட்டு தேர்வு செய்ய செந்திகுமார் எம்பிக்கு அழைப்பு விடுத்த நிலையில், தான் விதித்த காலக்கேடு முடிவடைந்தது என்றும் இதுவரை அண்ணாமலை IPS அவர்களிடம் இருந்து உறுதியான செய்தி எதுவும் வரவில்லை என அந்தர் பல்டி அடித்துள்ளார் செந்தில்குமார் எம்பி.

இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை IPS, விவாதம் நிகழ்ச்சியை யார் தவிர்க்கிறார்கள் என்பதை மக்களே தீர்மானித்து கொள்ளட்டும், நான் ஆறு தேதிகளை உங்களுக்கு பரிசீலனை செய்தேன் ஆனால் அதற்கு இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை, நீங்கள் விரும்பும் போது விவாதத்தில் பங்கு பெற எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என அண்ணாமலை IPS பதிலளித்துள்ளார், இந்நிலையில் இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் கூறுகையில், திமுக எம்பி செந்தில் குமார் தன்னை விளம்பரம் செய்து கொள்வதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம், தற்போது தமிழக அரசியலில் அண்ணாமலை IPS உச்சத்தில் இருப்பதால் அவருடன் வம்பிழுத்து விளம்பரம் தேட செந்தில்குமார் எம்பி முயற்சி செய்து அந்தர் பல்டி அடித்து குப்புற விழுந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தற்கொலையை சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துகின்றனர்.! மாணவி தற்கொலை குறித்து பேராசிரியர் கருத்து.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *