பூடான் மாலத்தீவுகள் நாடுகளுக்கு இந்தியா சார்பில் இரண்டரை லட்சம் முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒன்றரை லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு பூடானுக்கும், ஒரு லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு மாலத்தீவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புனேயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானத்தில் இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நல்லெண்ண அடிப்படையில் நன்கொடையாக மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இதேபோல் வங்க தேசத்துக்கும் 20 லட்சம் முறை செலுத்தும் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன.!
இந்த மருந்தை அந்நாட்டின் உயர் அதிகாரிகள் முறைப்படி பெற்றுக் கொண்டனர்.விரைவில் பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுதவிர ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் இருந்து தடுப்பு ஊசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தென்கொரியா, கத்தார், சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க