ஹிந்துக்களின் உரிமைகளை நிலைநாட்டிய உயர்நீதிமன்றங்கள்

இந்தியா தமிழகம்

பாரத தேசத்தில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்து மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மதமாற்றம் செய்ய நினைக்கும் ஆங்கிலேய அடிமைகளும், அரபு தேச தீவிரவாத இயக்கங்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இங்கே வளர்ந்து வருகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் பாரத தேசத்தை ஆட்டிவைத்த இந்த தீயசக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார் பாரத பிரதமர் மோடி.

இதனால் அவர் மீது சேற்றை வாரி இறைக்க தங்களுக்கு துணையாக மேலை நாட்டு ஊடகங்களையும், அவர்களது கட்டுப்பாட்டில் இங்கு இயங்கும் ஊடகங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஹிந்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதோடு மட்டுமல்லாது, ஹிந்து சமய சம்பிரதாயங்களை தங்களது போலவும் காட்டி வருகின்றனர் ஆபிரகாம் மதத்தினர்.

இங்குள்ள அரசியில்வாதிகள் சிலர், ஹிந்து தர்மத்தை அழிப்போம் என்று பொதுக் கூட்டத்தில் பேசுகின்றனர். இன்னும் சில கீழ்த்தரமான அரசியில்வாதிகள் நமது பழக்க வழக்கங்களை, பாரம்பரியத்தை, வழிபாட்டு முறைகளை, மந்திரங்களை கிண்டல் கேலி பேசி வருகின்றனர். இதனை எதிர்த்து ஹிந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஹிந்துக்களின் உரிமைக்கும், கோரிக்கைகளுக்கும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் சில வெற்றிகளும் கிடைத்துள்ளன.

அச்சரபாக்கம் மலை மீது வனத்துறை சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ள சர்ச் வளைவு கட்டிட கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூரில் வி.களத்தூர் என்ற கிராமத்தில் 3 நாட்கள் நடக்கும் ஹிந்து கோயில் திருவிழாவை ஒரு நாள் மட்டும் நடத்த வேண்டும் எனவும், முஸ்லீம்கள் வசிக்கும் வீதி வழியாகவும் சாமி ஊர்வலம் வரக்கூடாது எனவும் இஸ்லாமியர்கள் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், “மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளது”.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல சாமி ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ காசி விசுவநாதரின் பேரருளால் தென்காசி உலகம்மன் சமேத, காசி விசுவநாதர்திருக்கோவிலுக்கு சொந்தமான கட்டளை இடத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மசூதியில் எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது எனவும், மேலும் தற்போதைய நிலையே தொடரும் எனவும் கூறி இசுலாமிய தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் ஹிந்துக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது! தொடர்ந்து நீதிமன்றங்களில் ஹிந்துக்களின் உரிமைக்கும், கோரிக்கைகளுக்கும் சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றிபெறும் முயற்சிகளை ஹிந்து வழக்கறிஞர்கள் செய்திட வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *