அரசியலுக்கான புதிய பயணத்தை தொடங்கிய பாரத பிரதமர்.

அரசியல்
PM Modi addresses public meeting in Coimbatore, Tamil Nadu - YouTube

கோவையில் நேற்றைய கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தனது உரையில் தமிழகம் புதிய தேர்தலை சந்திக்க போகிறது என்று கூறியுள்ளார்.  ஆம் இரு ஆளுமைகள் இல்லை, என்ற கண்ணோட்டம் பொதுவாக எல்லோரிடத்திலும் இருக்கலாம்!ஆனால் அவ்வளவு சாதாரணமாக கடந்து செல்ல இயலவில்லை அவரது தீர்க்கதரிசனமான வார்த்தைகளை.நமது தமிழக அரசியல் திரு காமராஜர் ஐயா, திரு முத்துராமிலிங்க ஐயா  போன்ற தேசியவாதிகளுக்கு பிறகு பல வடிவங்களை பெற்று, பல மாயைக்குள் நுழைந்து, உருமாறி நிற்கிறது.முப்பது கோடி முகமுடையாள், செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்ற மகாகவியின் தேசிய சிந்தை இப்பொழுது கேள்விக்குறி தான். பிரிவினையே பிரதானமாகிவிட்டது இங்கு.தமிழன், குஜராத்தி, மராத்தி, வட பாரதம், தென் பாரதம் என்ற பிரிவினை மேலோங்கி நிற்கிறது. இவைகள் அனைத்தும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட சிந்தை மாற்றங்களே.அதிசயம் யாதெனில் தற்போது நிலை மாறி வருகிறது. தேசியம் சிந்தை தாண்டி திட்டங்கள் வழியாகவும், அதற்கான முன்னேற்பாடுகளும் பயணிக்க ஆரம்பித்து விட்டது.ஆம் தேசிய நதிகளை இணைக்கும் திட்டம். அந் நதிகள் இணையும் போது, இங்கு நீர் வரத்து அதிகமாகும் தானே, அதற்கான முன்னேற்பாடாகவும் இருக்கலாம், கல்லணை யின் புணரமைப்பு பணி!ஆம் நீர் வரத்து கண்டிப்பாக அதிகமாகும், அதற்கான முன்னேற்பாடும் ஆரம்பித்து விட்டது.  இது தேசியம் செய்கின்ற வேலை இது தான்.  இனி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என்ற பிரிவினை கிடையாது, பாரதமே தேசியத்தின் உயிர் மூச்சாக போற்றப்படுகிறது.அத்தகு தேசியத்தை நோக்கிய ஆரம்ப விதை தான் இந்த தேர்தல்களம் காணப்போகிறது. தேசியவாதிகளுக்கு இது மற்றற்ற மகிழ்ச்சியை வழங்க போகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.2021 தேர்தலில் விதைக்கப்படும் தேசிய விதை விரைவில் விருட்சமாக வளரப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *