பாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்படுகிறார்களா ?…

அரசியல்

பாஜகவைப் பார்த்து இஸ்லாமியர்கள் பயப்படவில்லை, இஸ்லாமிய கட்சிகள் தான் பயப்படுகின்றன என கூறியிருக்கிறார் இஸ்லாமிய ராஷ்ட்ரீய மஞ்ச் பாத்திமா அலி. மேலும் அவர் கூறுகையில்: இஸ்லாமிய கட்சிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ போன்றவை இப்படிப்பட்ட பய உணர்வை மக்கள் மனதில் செலுத்தும் வேலையை செய்கின்றன. உழைத்து பிழைக்கும் இஸ்லாமியர்கள் நாட்டை நேசித்து, சகோதரத்துவத்துடன் அமைதியாக வாழ்கிறார்கள். இவர்களை ஏய்த்து பிழைக்கும் அரசியல் கட்சிகள் தான் நாட்டின் அமைதியை கெடுக்கிறார்கள்.

2019மக்களவைத் தேர்தலில், இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 60+ தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இஸ்லாமியர்களின் வோட்டுகளையும் பெற்றுதான் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியின்போது தான் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால், இந்த சம்பவத்தையே தவிர்த்திருக்கலாம். ஆனால் பல ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்ப்பு வெளியான நவம்பர் 9, 2019 அன்று இந்தியாவின் கட்டுகோப்பான அமைதி உலகையே வியக்கவைத்தது, காரணம் பாஜக அரசின் முறையான செயல்பாடுகள் தான்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் 1998 ல் கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ், திமுகவுடன் சில இஸ்லாமிய கட்சிகள் கூட்டணியும் அமைத்துள்ளன. பலர் இன்று வரை சிறையில் உள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு அவர்களை விடுதலை செய்ய ஏன் முயற்சிக்கவில்லை? இன்று வரை திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் என்ன செய்தது இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்காக?

தர்கா ஜியாரத்தை தவறென்று சொல்லும் SDPI, தமுமுக போன்றவர்களே, வாழும் பிணங்களை வாழ்த்தி பாடி நீங்கள் அரசியல் செய்வது கேவலமில்லையா?? கூட்டமாக வந்து எங்களை மிரட்டும் இஸ்லாமிய சகோதர்களே, கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுகவுடன் நட்பு, பாஜகவை ஆதரிப்பதால் நாங்கள் பகை. எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ்விற்கு அஞ்சி கொள்ளுங்கள், இறை மறுப்பாளர்களோடு பணத்துக்காக கை கோர்க்கும் நீங்கள் இறை தண்டனைக்கு அஞ்சி கொள்ளுங்கள். உங்கள் பார்வையில் தாய் நாட்டை நேசிப்பது தவறென்றால் அந்த தவற்றை தொடர்ந்து செய்வோம் என்று கூறினார் பாத்திமா அலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *