பாஜகவினர் மீது தாக்குதல்..திரிணாமூல் காங்கிரஸ் திட்டமா..?

கொல்கத்தாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உடன் சென்ற கார்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விளக்கமளிக்க மேற்குவங்கத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்றுக் கொல்கத்தாவுக்குச் சென்றபோது, அவரின் காரைப் பின்தொடர்ந்து சென்ற கார்கள் மீது ஒரு கும்பல் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கார் கண்ணாடி உடைந்ததுடன், கைலாஸ் விஜய்வர்க்கியா, முகுல் ராய் உள்ளிட்ட பாஜகவினர் சிலர் காயமடைந்தனர்.

Why Do Windshields Crack? Ten Precautions To Protect Your Car's Windshield  - DriveSpark

தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மேலிடத் தலைவர்கள், மேற்கு வங்கத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரால் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினர். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் ஆட்சிக்கு முடிவுக்காலம் வந்துவிட்டதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், இதைத் தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிக்கை அனுப்பினார். இந்நிலையில் மேற்குவங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்க மாநிலத் தலைமைச் செயலருக்கும், காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *