தாக்குதல்களை இந்தியா பொறுத்துக் கொள்ளாது: அமைச்சர் ஜெய்சங்கர்

அரசியல்

இனவெறி தாக்குதல்களை, இந்தியா, கண்டும் காணாதது போல இருக்காது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பாஜகவில் இணைந்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்! | S Jaishankar  Joins Bjp: Foreign Minister S Jaishankar Formally Joins Bjp - NDTV Tamil

பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக இருந்த இந்திய வம்சாவளியினரான ராஷ்மி சாமந்த் அண்மையில் தமது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த காலங்களில் அவர் தெரிவித்த சில கருத்துக்கள்  இனவெறி தொடர்புடையவை என்ற விமர்சனம் அங்கு எழுந்ததை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரத்தை மாநிலங்களைவையில் எழுப்பிய பாஜக எம்பி  அஷ்வினி வைஷ்ணவ், பிரிட்டனில் காலனி ஆதிக்க கால மனப்பான்மை தொடர்வதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர்,  தேவைப்பட்டால் இந்த விவகாரம் பிரிட்டன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *