மார்ச் 7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை: குமரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்

தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றியை தேடித்தரும் பொருட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 7ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்; கன்னியாகுமரில் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஒருமாத அவகாசமே உள்ளதால், தமிழக அரசியல் களம் சுறுசுறுப்படைந்துள்ளது. தொகுதி பங்கீடு, தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட தேர்தல் பணிகளில், அதிமுக – திமுக இரண்டும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கு இம்முறை அதிகளவில் பாஜகவினரை அனுப்ப வேண்டும் என்ற முடிவோடு பிரதமர் மோடியும், உள்துறை […]

Continue Reading

திட்டங்களை சொல்லாமல் குஸ்தி எடுப்பது அழகா? ராகுலின் பிரசார ஸ்டண்ட் குறித்து குஷ்பு விமர்சனம்

பிரசார மேடைகளில் திட்டம் கொண்டு வருவது பற்றி பேசாமல், குஸ்தி எடுப்பது ஒரு தலைவருக்கு அழகல்ல என்று, பாஜகவை சேர்ந்த குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். பொதுவாக அரசியல் மேடைகள் காரசாரமாக இருக்கும். தேர்தல் காலங்களில் இன்னும் சொல்லவே வேண்டாம்; பிரசார மேடைகளில் சூடுபறக்கும் பேச்சுகளும், அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்களும் இருக்கும். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, பிரசார மேடைகளை கண்கட்டி வித்தை காட்டுமிடமாக மாற்றி வருகிறார். தன்னை எளிமையான தலைவர் என்று காட்டிக் கொள்ளவதற்காக […]

Continue Reading

குஜராத் உள்ளாட்சி தேர்தல்: நகராட்சி, ஊராட்சிகளிலும் பாஜக அபார வெற்றி

குஜராத் உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சியை தொடர்ந்து நகராட்சி, ஊராட்சி தேர்தலிலும் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் குஜராத்தின் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 231 தாலுகாக்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், நகராட்சிகளி 58.82% வாக்குகள் பதிவாகின; மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 65.80%, தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 66.60% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் […]

Continue Reading

தொகுதிப் பங்கீடு: அதிமுக – பாஜக தலைவர்கள் மீண்டும் பேச்சு

தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, பாஜக – அதிமுக தலைவர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஆளும் அதிமுக கூட்டணியில், பாமகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து பாஜக, தேமுதிகவுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து, தமாகாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று தெரிகிறது. இச்சூழலில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக தலைவர்கள், 3வது நாளாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள […]

Continue Reading

விருப்பமனு அளித்த அதிமுகவினருக்கு மார்ச் 4 முதல் நேர்காணல்

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.கவில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது; காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு குறுகிய அவகாசமே […]

Continue Reading

தொகுதிப்பங்கீட்டில் திமுக மீது அதிருப்தி: கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறுகிறதா?

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. கூட்டணியில் இருந்து வெளியேறுவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து அக்கட்சி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே இருப்பதால், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியை பொருத்தவரை, பாமகவுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது; அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று […]

Continue Reading

2ஜி, 3ஜி, 4ஜி எல்லாமே தமிழகத்தில் உள்ளது:அமித்ஷா வைத்த குறியால் திமுக கலக்கம்

பிரதமர் மோடியை தொடர்ந்து, அவரது வலதுகரமாக செயல்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தேர்தல் பிரசாரத்தில் திமுகவை குறி வைத்து, கடுமையாக தாக்கி பேசியிருப்பது, திமுக தலைமையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2ஜி 3ஜி 4ஜி எல்லாமே தமிழகத்தில் உள்ளது என்ற அமித்ஷாவின் ஆணித்தரமான குற்றச்சாட்டு, திமுக தலைவர்களின் நிம்மதியை கெடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் பாஜக தலைவர்கள், பொதுவாக காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்வார்கள், அல்லது ஆளுங்கட்சி சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் பேசுவார்கள். ஆனால், இம்முறை […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி போட முதியவர்கள் ஆர்வம்: முதல் நாளில் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவு வரலாம் என்று சிலர் பொய்த் தகவல்களை பரப்பிய நிலையில், தடுப்பூசி முதல் நாளிலேயே முதியவர்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதல் நாளான நேற்று மட்டும் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்றுக்கு இந்தியா சார்பில் 2 தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் 2ஆம் கட்ட திட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி, 60 […]

Continue Reading

அதிமுக விருப்பமனு பெற அவகாசம் குறைப்பு: மார்ச் 3 கடைசி நாள்

தேர்தலுக்கான அவகாசம் குறைவாக உள்ளதால், அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய ஒருமாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் அதிமுக தரப்பில், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது போன்ற பணிகள் இன்னமும் முழுமை அடையவில்லை. அதை முடித்து வேட்பாளர் நேர்காணல், இறுதிப்பட்டியல் வெளியீடு, தொகுதிகளில் பிரசாரம், […]

Continue Reading

‘ஸ்டாலின்தான் வர்றாரு’ விளம்பரப்பதாகை: திமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு!

— திமுக சார்பில் ‘ஸ்டாலின்தான் வர்றாரு’ என்ற விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு, தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தமிழகத்தில், ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. அதிமுக தரப்பில் வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற பாடலுடன் விளம்பரம், டிவி, நாளிதழ்கள், ரேடியோ, இணையதளங்களை ஆக்கிரமித்தன. அதிமுகவின் விளம்பரத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து, திமுகவும் தன் பங்கிற்கு […]

Continue Reading