கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்-எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்த புகாரில், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர், கொரோனா பாதிப்பு காரணமாக எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், சிகிச்சைக்கு கூடுதலாக கட்டணம் வசூலித்ததோடு உடலை ஒப்படைக்க 2 லட்சத்து 44 ஆயிரம் செலுத்த மருத்துவமனை நிர்வாகம் நிர்பந்தம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். மேலும், கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடவும் […]

Continue Reading

சுல்தான் படத்தில் கார்த்தியை விட இவர் தான் பெஸ்ட்.. மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்லும் பிரபலம்

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சுல்தான் படத்தில் கார்த்தியை விட குறிப்பிட்ட பிரபலம் ஒருவருக்குத்தான் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய படமாக வெளியான திரைப்படம் தான் சுல்தான். கார்த்தி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான சுல்தான் படத்தை சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். சுல்தான் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படத்தின் சாயல் அதிகமாக […]

Continue Reading

சிறுமி ஆசையை நிறைவேற்றிய அண்ணாமலை – பாஜக வில் மட்டுமே சாத்தியம்

கரூரில் சிறுமி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் வீட்டில் இரவில் தங்கி உணவருந்தி கிராம மக்களின் குறைகளை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாமலை கேட்டறிந்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் அண்ணாமலை. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான இவர் முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அரவக்குறிச்சி தொகுதி கிராமங்கள் நிறைந்த தொகுதி. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட   வேட்டமங்கள் காலணியில் வாக்கு சேகரிக்க அண்ணாமலை சென்றிருந்தார். இந்த பகுதியில் […]

Continue Reading

திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.பி.யும், அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எம்.பி.கனிமொழிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை இப்பொழுது எப்புடி உள்ளது ..?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது என ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆம் தேதி அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐசியூவில் இருந்த அவர் இன்று சிறப்பு அறை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

Continue Reading

நாடு முழுவதும் 89,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

24 மணி நேரத்தில், நாட்டில் 89 ஆயிரத்து 129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், நேற்று ஒரே நாளில் 714 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Continue Reading

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

சீரம் நிறுவனத்தில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இலங்கையில் கொரேனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணியை இலங்கை தொடங்கியது. முதற்கட்டமாக 5 லட்சம் டோஸ்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது இதற்கான மருந்துகள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சீனாவிடமிருந்து 6 லட்சம் […]

Continue Reading

கட்சி தலைவர்கள் மற்றும் சின்னங்கள் மிட்டாய்கள் செய்து விழிப்புணர்வு

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மிட்டாய் கடை ஊழியர்கள் இணைந்து மோடி மற்றும் மம்தா பானர்ஜியின் உருவ வடிவிலான இனிப்பு சிலைகளை தயாரித்து உள்ளனர். மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடந்து வரும் நிலையில் அங்கு வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக மிட்டாய் கடை நிர்வாகம்  விநோத முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. அங்கு களம் இறங்கியுள்ள மோடி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் உருவங்களை மிட்டாய்களாகவும், இரு கட்சிகளின் சின்னங்களை மிட்டாய் வடிவில் தயாரித்து  […]

Continue Reading

செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி இரவு பிரச்சாரத்தின் போது செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் அரவக்குறிச்சி […]

Continue Reading

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ககபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் அந்த இடத்துக்கு கூடுதலான படைகள் வரவழைக்கப்பட்டனர். இதைதொடர்ந்து தீவிரவாதிகள் இருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திகொண்டே முன்னேறி தங்களது கட்டுக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக நேற்று […]

Continue Reading