விஜய்யை விட விஜய் சேதுபதி தான் எனக்கு பிடித்தது – சூப்பர் ஸ்டார் பேட்டி

தெலுகு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் உப்பனா திரைப்படத்தின் இசை வெளியீட்டில் தான் மாஸ்டர் திரை படத்தை பார்த்தாகவும் அதில் எனக்கு விஜய் நடித்த jd கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதி நடித்த பவானி எனும் கதா பாத்திரமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அந்த இசை வெளியிட்டு விழாவில் கூறினார், அது போக விஜய் சேதுபதியை ஹீரோ மற்றும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் மிகவும் எதார்த்தமாக நடிக்கும் திறன் விஜய் சேதுபதிக்கு உள்ளதாக பாராட்டினார் மக்கள் […]

Continue Reading

சூரரை போற்றுக்கு கொரோன தொற்றா..?

 கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். வாழ்க்கை இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம் என்றும் அச்சத்துடன் முடங்கி விட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம் என்றும், அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும் எனவும் தெரிவித்துள்ளார். ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் […]

Continue Reading

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா?

TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? How Many Groups in TNPSC? குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8 குரூப் – 1 சேவைகள் (Group-I) துணை கலெக்டர் (Deputy Collector)துணை போலீஸ் […]

Continue Reading

உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி பிரதமர் அறிவிப்பு!

டெல்லி: உத்தரகண்ட் சாமோலியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ;2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை திடீரென்று உடைந்து விழுந்தது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த […]

Continue Reading

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் துணைராணுவத்தின் 50,000 வீரர்கள் குவிப்பா?

விவசாயிகள் மூன்று மணி நேரச் சாலை மறியல் போராட்டம் நடத்தவுள்ளதையொட்டி டெல்லியில் காவல்துறை, துணைராணுவப் படை வீரர்கள் ஐம்பதாயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் இன்று பிற்பகல் மூன்றுமணிநேரம் சாலை மறியல் நடத்த உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லியைச் சுற்றி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கூர்முனை கொண்ட இரும்புக் கம்பிகளைச் […]

Continue Reading

பிரேசிலில் கொரோனா வைரசின் 2-வது அலை

பிரேசிலில் கொரோனா வைரஸின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணியில் விமானப்படையின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மனாஸ் நகரில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக அங்கு வரும் நோயாளிகளை வேறு பகுதிக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Continue Reading

இது வேறமாறி தேர்தல் – ஓட்டு போட்டா வீட்டுக்கு ஒரு ஆக்டிவா பிளஸ், மட்டன் பிரியாணி…!

சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் வகையில், வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டு வேட்டி-சேலை, தையல் எந்திரங்கள் வழங்குவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து நெல்லை டயோசிசன் தேர்தலுக்கான வாக்கு வேட்டை நடந்து வருகிறது. மாதம் ஒரு முறை மட்டன் பிரியாணி வழங்குவது உள்ளிட்ட இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளித்த வேட்பாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்திற்குட்பட்ட ஊர்களில் இருந்து பெருமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 7ஆம் தேதி நடக்கிறது. திருநெல்வேலி திருமண்டலத்தில் […]

Continue Reading

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்… தமிழகம் வருகிறார் இந்திய தேர்தல் ஆணையர்

சட்டமன்ற தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்திருந்தனர். இந்த நிலையில், வருகிற 10-ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் […]

Continue Reading

இந்தியர்களாக ஒன்றிணைவோம்” என்கிறார் கிரிக்கெட் உலகின் கடவுள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் கீழ் பொருளாதார ரீதியாக இந்தியா வலுவடைந்து வருவதை பொறுக்காத தேச விரோத சக்திகள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இடதுசாரிகள், மாவோ தீவிரவாதிகள், ஜிஹாதி தீவிரவாதிகள் மற்றும் காங்கிரஸ், திமுக போன்ற குறுகிய நோக்கம் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.எதிர்க்கட்சிகள்; ஆளும் கட்சிக்கு எதிராக போராடுவது என்பது அன்றாடம் நடக்கும் விவகாரம்தான். ஆனால் அயல்நாட்டிலிருந்து இந்திய தேசத்திற்கு எதிராக குரல் கொடுக்க […]

Continue Reading

ஏரோ இந்தியா கண்காட்சி – கண்ணுக்கு விருந்தான நிகழ்ச்சி

பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானத்தில் வட்டமடித்து சாகச காட்சிகளை நடத்தின. ஏரோ இந்தியா விமான கண்காட்சியை பெங்களூரு ஏலஹங்கா விமானப்படைத் தளத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி வைத்தார். நாளை முடிவடைய உள்ள இந்த 3 நாள் கண்காட்சியின் இரண்டாம் நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து பல்வேறு சாகச காட்சிகளை நடத்தி அங்கு திரண்டிருந்த மக்களை சிலிர்க்க வைத்தன.. இரண்டு […]

Continue Reading