கோடிகளுக்கு அதிபதி: இப்போது லாட்டரியில் ரூ. 30 கோடி

இந்தியா சினிமா

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு துபாய் டூட்டி ஃப்ரீ லாட்டரியில் ரூ. 32 கோடி பரிசாக விழுந்துள்ளது.

Image result for dubai duty free ticket logo

அமீரகத்தில் விற்கப்படும் டூட்டி ஃப்ரீ லாட்டரிகள் வெகு பிரபலம். இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினால் கிடைக்கும் பரிசுகளுக்கு வரி விதிக்கப்படாது. எனவே, நடைமுறை செலவுகள் போக, மீதியுள்ள தொகை அப்படியே பரிசு வெல்பவர்களுக்கு கிடைக்கும். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில், கடந்த ஜனவரி 26 – ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா, லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இதில் முதல் பரிசான 15 மில்லியன் திர்காம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 கோடியை பரிசாக வென்றுள்ளார். இரண்டாவது , மற்றும் மூன்றாவது பரிசும் இந்த முறை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. இரண்டாவது பரிசை வென்ற பிரேம் என்பவர் கடந்த 26 – ஆம் தேதி வேலை இழந்துள்ளார். ஏதோ ஒரு நினைப்பில் லாட்டரி டிக்கெட்டை அதே தினத்தில் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய லாட்டரிக்கு கிட்டத்ட்ட ரூ. 6.69 கோடி பரிசாக விழுந்துள்ளது.

தற்போது, தோஹாவில் வாழ்ந்து வரும் தஸ்லீனா கத்தார் மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் அதிபர் கடாஃபியின் மனைவி ஆவார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கோழிக்கோடு, தலச்சேரி, வடகரா உள்ளிட்ட பல இடங்களில்  எம்.ஆர்.ஏ ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. கேரளாவில் காசர்கோடு மாவட்டத்திலுள்ள திரிகரிப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்யாவும் தஸ்லீமாவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *