பாஜக – அதிமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை

அரசியல் தமிழகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தமிழகம், மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபைத் தேர்தல், ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. குறுகிய அவகாசமே உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் இன்னமும் தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த பணிகளையுமே முடிக்கவில்லை.

திடுதிடுப்பென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் பதற்றமும் தடுமாற்றமும் அடைந்துள்ளன. திமுக தரப்பில் பொதுக்குழுக் கூட்டம், திருச்சி மாநாடு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுவிட்டன; இனி தொகுதிப் பங்கீடு விஷயத்தில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளது.

அதேபோல் ஆளுங்கட்சி கூட்டணி தரப்பிலும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமியில் இல்லத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் எ.முருகன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி , சி.டி. ரவி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, பாமக தலைவர்களும் அதிமுக தலைவர்களுடன் இன்றே தொகுதிப்பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளனர். அடுத்த சில நாட்களில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விவரம் வெளியாகும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *