சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் – பாஜக தலைவர் முருகன்

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிப்பதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

BJP can win 60 seats on its own, claims State chief Murugan - DTNext.in

சென்னை அண்ணா நகரில் 234 சட்டமன்றத் தொகுதிகளின் பாஜக பொறுப்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் கூடுதல் மொழிகள் கற்பிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அதுமட்டுமின்றி முரசொலி மூல பத்திரம் எங்கே என்று எல்லோரும் கேட்கிறோம்.  நான் எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தின் தலைவராக இருந்த போது கேட்டேன். ஆனால் தற்போது என் மீது வழக்கு தொடுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். எனவே ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிட இல்லை என்றால் தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *