வெற்றி வாகை சூட இருக்கும் பாஜக

ஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.செம ஸ்கெட்ச்

ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், ஒரு சட்டசபை தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து திட்டமிட்டு வெற்றியை தன்வசப்படுத்தி உள்ளது பாஜக. மொத்தம் 150 வார்டுகள் கொண்டது ஹைதராபாத் மாநகராட்சி.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் இதுதான்.இங்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டு இருக்கிறது.

காலை 10 மணி நிலவரப்படி பாஜக 43 வார்டுகளில் முன்னிலை வகித்தது. மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது. தற்பொழுது நிலவரத்தின் படி பாஜக 88 வார்டுகளில் முன்னிலை வகித்தது , தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 36.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 99 இடங்களை வென்று அபாரமாக வெற்றி வாகை சூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *