தலைவர் மீது உள்ள அன்பை கையில் பச்சை குத்தி வெளிப்படுத்திய பாஜக இளைஞரணி நிர்வாகி.!வியப்பூட்டும் சம்பவம்.!

தமிழக பாஜக இளைஞரணி தலைவராக இரண்டாவது முறையாக வினோஜ் செல்வம் நியமிக்கபட்ட பின் தமிழகம் முழுவதும் பம்பரமாக சுழன்று இளைஞரணியை வலுப்படுத்தி வருகிறார், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கே உள்ள இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் பேசி வரும் வினோஜ், இளைஞரணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகிறார்.

அவர் விஜயம் மேற்கொள்ளும் அணைத்து மாவட்டங்களிலும் இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு வழங்க பட்டு வருகிறது. குறிப்பாக அவர் பின்னல் அணிவகுக்கும் வாகனங்கள் எண்ணிக்கை திமுக இளைஞரணியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது, இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ள திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மதுரையில் நடந்த இளைஞரணி கூட்டத்தில்,” இந்தி படித்தால் தமிழ் அழியாது, திமுக தான் அழியும்”‘ என அவர் பேசிய வசனத்தை டீசர்ட்ல் அச்சடித்து வெளியிட்டு பெரும் பரப்ரபை ஏற்படுத்தினார் பாஜக இளைஞரணி மாநில செயலாளர் Dr.சங்கரபாண்டி.

இந்நிலையில் தற்போது கரூரை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் கார்த்திக் , பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதத்தில், மேலும் பாஜக மீது உள்ள தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வினோஜ் பெயரையும் தாமரை சினத்தையும் கார்த்திக் தனது கையில் பச்சை குத்தியுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு முன் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் பெயரை அவர்களின் கட்சி தொண்டர்கள் பச்சை குத்தி தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அதே போன்று தற்போது பாஜக மீது தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தன் கையில் பச்சை குத்தியுள்ள கரூரை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் கார்த்திக் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதை பாஜக இளைஞரணி நிர்வாகிகள் பலரும் பாராட்டி வருகின்றனர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக இளைஞரணிக்கு கடுமையான போட்டியை பாஜக இளைஞரணியினர் ஏற்படுத்தி வருவது குறிப்படத்தக்கது.

அண்ணாமலை IPS அதிரடி.! விளம்பரம் தேட முயற்சித்து அந்தர் பல்டி அடித்து குப்புற விழுந்த திமுக எம்பி செந்தில்குமார்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *