போபர்ஸ் ஊழல் – ஒரு சிறப்பு பார்வை

இந்தியாவின் மிகப்பிரபலமான ஊழல் வழக்கான போபர்ஸ் ஊழல் (Bofors Scandal) வழக்கின் இடைத்தரகராக செயல்பட்ட இத்தாலியைச் சேர்ந்த Ottavio Quattrocchi நினைவு தினம் இன்று. (13 ஜூலை 2013), இந்தியாவிற்காக சுவீடனின் பிரபல Bofors நிறுவனத்திடம் இருந்து 410 (155 mm field howitzer ) பீரங்கி வாங்கியதில் தனிப்பட்ட லாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி 1989 தேர்தலில் தோல்வியடைந்தது.

இதன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் ராஜிவ் காந்தி 1991 ல் படுகொலை செய்யப்பட்டார். Ottavio Quattrocchi மறைவுக்குப்பின், காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இவ்வழக்கு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊழலை வெளிக்கொணர்ந்தவர் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சரும் பின்னாளைய பிரதமருமான வி.பி.சிங் ஆவார்.

1646 ல் சுவீடனில் துவங்கப்பட்ட Bofors நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். நோபல் பரிசு உருவாக காரணமானவரும் டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவருமான சுவீடனைச் சேர்ந்த Alfred Nobel, 1894 ல் இந்நிறுவனத்தை வாங்கினார்.அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரியாமல் தான் இந்த போபர்ஸ் ஊழல் நடந்துள்ளதாகவும்,

அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது பதவியையும், பெயரையும் உபயோகித்து கொண்டு, இத்தாலியைச் சேர்ந்த சிலரே இந்த ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னாளில் அந்த நயவஞ்சகர்களை புரிந்து கொண்ட ராஜீவ் காந்தி, அதற்கு பிறகு இதே போன்று சில ஆயுதங்கள் வாங்குவதில் ஒத்துழைக்காத காரணத்தினால் தான் ராஜீவ் காந்தி பன்னாட்டு தீவிரவாத குழுக்கள் உதவியுடன் 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு கூற்றும் உள்ளது.

சனாதன அரசியல் வீழ்த்தபட இன்னும் பன்மடங்கு வீரியத்தோடு கருப்பர் கூட்டம் செயல்பட வேண்டுமாம்.! திருமாவளவன் ஊக்கம் (வீடியோ உள்ளே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *