ஆலப்புழா படுகொலை – தொடர்ந்து ரத்தம் சிந்தும் தேசபக்தர்கள்

இந்தியா

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில், எஸ்டிபிஐ – பிஎஃப்ஐ (SDPI – PFI) சேர்ந்தவர்களின் கொடூரத் தாக்குதலில், ஆர்.எஸ். எஸ் (RSS) சேர்ந்த இருவர், கடுமையாகத் தாக்கப் பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.

24 பிப்ரவரி 2021 அன்று, வயலார், ஆலப்புழாவில், நந்து R கிருஷ்ணா என்ற ஆர் எஸ் எஸ் (RSS) ஸ்வயம்சேவக், எஸ்.டி.பி.ஐ – பி.எஃப்.ஐ (SDPI – PFI) சேர்ந்தவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். 22 வயதான நந்து R கிருஷ்ணா, தன்னுடைய பெற்றோருக்கு ஒரே மகன். கழுத்துப் பகுதியில், கத்தியை வைத்து கொடூரமாக தாக்கியதில், நந்து R கிருஷ்ணா உயிரிழந்ததாக, “ஆலப்புழா மருத்துவக் கல்லூரி” பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

S நந்து என்ற மற்றொரு RSS ஸ்வயம்சேவக், எஸ்.டி.பி.ஐ – பி.எஃப்.ஐ (SDPI – PFI) சேர்ந்தவர்களால்,  கொடூரமாக தாக்கப்பட்டு, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருடைய கைகள், கத்தியால் வெட்டப்பட்டு துண்டிக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்டிபிஐ, பிஎஃபைஐ (SDPI – PFI) சேர்ந்த, வடுதலா, எர்மலூர், நெடும்பரக்காடு, வயலார்  பகுதியை சேர்ந்த, 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவை ,பிஎஃப்ஐ செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதி.

எஸ்டிபிஐ (SDPI) சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக, இப்பகுதியில், இந்து மத சின்னங்கள் குறித்து, அவதூறாக பேசினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்கப்பட்ட இரண்டு ஸ்வயம்சேவகரும், போராட்டம் செய்தனர். எஸ்டிபிஐ (SDPI)  சேர்ந்தவர்கள் கற்களை வீசி, கலவரத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து,  காவல் துறையினர் தலையிட்டு, அங்கிருந்து திரும்புமாறு அறிவுறுத்தினர். ஆனாலும், எஸ்டிபிஐ, பிஎஃபைஐ (SDPI – PFI) சேர்ந்தவர்கள், அங்கு உள்ள ஸ்வயம்சேவகர்களின் வீடுகளை, அருகில் உள்ள மசூதிகளில் இருந்து, எடுத்து வரப்பட்ட, கொடூர ஆயுதத்தால், கொடூரமாக தாக்கினர். இதன் மூலம், இது ஏற்கனவே திட்டமிடப் பட்டது, என்பது உறுதியாகிறது.

எஸ்டிபிஐ, பிஎஃபைஐ  (SDPI – PFI) அமைப்பை சேர்ந்தவர்கள்,  இது போல் தாக்குதல் செய்வது, முதல் முறையல்ல. சபரிமலை போராட்டத்தின் போதும், எஸ்டிபிஐ, பிஎஃபைஐ (SDPI – PFI) சேர்ந்தவர்கள், சபரிமலை ஐயப்பன் பக்தர்களை, இது போல தான், தாக்கினர். அப்போது, “சந்துருர்” மசூதியிலிருந்து, பிஎஃபைஐ (PFI) சேர்ந்தவர்கள், ஆயுதத்தை எடுத்து  வந்து தாக்கினர். காவல் துறையினர், அப்போது, எந்த நடவடிக்கையும் எடுக்க, மறுத்து விட்டனர். அங்கு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாராளுமன்ற உறுப்பினர் (MP) ஆரிப் துணையோடு,  இது போன்ற சம்பவங்கள், நடை பெறுவதாக நம்பப் படுகின்றது.

பாஜக மாநிலத் தலைவர் K சுரேந்திரன், இந்த தாக்குதலை கண்டித்ததுடன், யூ.டி.எப் – எல்.டி.எப் (UDF – LDF) கூட்டணி கட்சிகள், இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக கண்டித்தார். மேலும், மாநில அரசு இதற்கு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தீவிரவாத கும்பலுக்கு துணை போவதாகவும், அவர் குற்றம் சாட்டினார்.

நந்து R கிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *