2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது.ஜனாதிபதி உரையுடன் தொடங்கியுள்ள இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி நிறைவடைகிறது. பின்னர் அதன் மீதான விவாதம் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நீடிக்கிறது.
நாட்டின் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய மற்றும் உலகநாடுகள் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இதை அமைய வேண்டும் என்பதே அந்த சவால் ஆகும்.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.