உண்மையான தகவலை மறுக்க முடியுமா?நடந்தது உண்மையா? இல்லையா?சட்டசபையில் எதிர்கட்சிகளை தெறிக்க விட்ட எடப்பாடியர்.!

நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சட்டசபையில் பேசுகையில், நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் ஆஜர் ஆனாரா? இல்லையா? நடந்தது உண்மையா? இல்லையா? என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் நீட் தேர்வை தமிழகத்திற்கு நுழையாமல் தடுத்தது தி.மு.க. ஆட்சி தான் என்று தெரிவித்தார். பின்னர் நீட் குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர் அவரின் கருத்துக்களை தெரிவித்தபோது குறுக்கிட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவறான தகவல்களை பதிவு செய்யாதீர்கள்.

நீட் தேர்வு என்ற வார்த்தை எப்போது இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது யார் ஆட்சியில் இருந்தது என்று கேள்வி எழுப்பினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தவறான தகவல் கிடையாது, உண்மையான தகவல். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததா, இல்லையா, மறுக்க முடியுமா? எதிர்க்கட்சி துணைத் தலைவரே சொல்லுங்கள், யாருடைய ஆட்சியில் நீட் வந்தது? நீட் தேர்வு எப்பொழுது வந்தது? நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று இந்த நாட்டிற்கே தெரியும், யாருக்கும் தெரியாதது கிடையாது.

2010-ஆம் ஆண்டு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பைப்பெற்றது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுக்க முடியுமா? அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்? இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறீர்களே, இத்தனை பேர் வாதாடுவதற்கு காரணம் என்ன? காரண கர்த்தா யார்? இவ்வளவு பேருக்கு பிரச்சனை வந்ததற்கு யார் காரணம்?

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை மீண்டும் கொண்டு வருவதற்கு யார் காரணம்? நாங்கள் அல்ல. நீங்கள் கூட்டணியில் வைத்திருக்கிறீர்களே, இப்பொழுது வெளிநடப்பு செய்தார்களே காங்கிரஸ் கட்சியினர், அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி, வெளியில் வந்து முற்றுப்புள்ளி வைத்தேன் என்று சொன்னார்கள். நீங்கள் கூட்டணியில் இடம்பெற்று 2010-ஆம் ஆண்டில் நீட்தேர்வை கொண்டு வந்தது தான் 13 பேர் மரணத்திற்கு காரணம். அதற்கு திமுக துணை போனதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றுப் பிழையை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இவ்வாறு முதலமைச்சர் ஆவேசத்துடன் பேசினார்.

திமுக எம்பி செந்திகுமாரை புகழ்ந்து பாராட்டிய தமிழக பாஜக இளைஞரணி தலைவர்.! எதற்கு தெரியுமா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *