ஒடிசாவைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் பிரதமர் மோடிக்கு வித்தியாசமான முறையில் தனது கோரிக்கையினை தெரிவித்துள்ளார்.
சமரேந்திர பெஹெரா என்னும் அந்த நபர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கியுள்ளார்.
இந்தக் காட்டில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுகிறது என்று கூறுபவர் அதனைத் தடுக்க பிரதமர் கவனம் கொள்ளும் வகையில் உருவப்படத்தினை செதுக்கி கோரிக்கையினை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.