சிறுமி ஆசையை நிறைவேற்றிய அண்ணாமலை – பாஜக வில் மட்டுமே சாத்தியம்

கரூரில் சிறுமி ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் வீட்டில் இரவில் தங்கி உணவருந்தி கிராம மக்களின் குறைகளை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அண்ணாமலை கேட்டறிந்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் அண்ணாமலை. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான இவர் முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அரவக்குறிச்சி தொகுதி கிராமங்கள் நிறைந்த தொகுதி. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட   வேட்டமங்கள் காலணியில் வாக்கு சேகரிக்க அண்ணாமலை சென்றிருந்தார். இந்த பகுதியில் […]

Continue Reading

திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக எம்.பி.யும், அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய எம்.பி.கனிமொழிக்கு லேசான அறிகுறிகள் இருந்ததின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading

தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்க ஆணையர் கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், அந்த கசப்பான அனுபவத்தை, மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், சென்னை மெரினாவில் தனியார் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணற் சிற்பத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Continue Reading

மகாராஷ்டிரா மாநில இரத்த வங்கிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மட்டுமே இரத்தம் இருப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிராவில் உள்ள இரத்த வங்கிகளில், மருத்துவ தேவைக்கான இரத்தம், அடுத்த 7 நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக, வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, குருதி கொடையளிக்க தன்னார்வலர்கள் முன்வராததால், இரத்த வங்கிகளில், இரத்தம் இருப்பு முற்றாக குறைந்துள்ளது. மும்பை உள்ளிட்ட இடங்களில் குருதி கொடையாளர்களில் பெரும்பாலானோர் சாப்ட்வேர் உள்ளிட்ட ஐ.டி துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது, வீட்டிலிருந்து பணிபுரிவதால், இரத்த தானம் முற்றாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா மற்றும் பிற நோயாளிகளுக்கான […]

Continue Reading

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; அனல் காற்று வீசும் -சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் நேரத்தில் திறந்த வெளியில் பணி செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வரும் 4 ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் தரைக்காற்றால் வெப்பம் மேலும் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை […]

Continue Reading

கரூரில் ம.நீ.ம பொருளாளரோடு வர்த்தக தொடர்புடைய நிறுவனங்களில் ஐடி ரெய்டு: 5 இடங்களில் நடைபெறும் சோதனையில் 5 கோடி ரூபாய் பறிமுதல்

கரூரில் ஏற்றுமதி மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை 2ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், கணக்கில் வராத ரொக்கம் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் டெக்ஸ் யார்டு, யூனிட்டி எக்ஸ்போர்ட், குளோபல் நிதி நிறுவனம் மற்றும் பிரகாஷ், மாரியப்பன் எனும் 2 ஃபைனான்சியர்கள் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு […]

Continue Reading

ரயில்களில் சிகரெட் பிடித்தால் சிறைத்தண்டனையா?..அமைச்சகம் எச்சரிக்கை

ரயில் நிலையத்தில் புகை பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில், டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்தது தொடர்பான விசாரணையில், கழிவறை குப்பைத்தொட்டியில், சிகரெட்டை அணைக்காமல் வீசியதே காரணம் என்று தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்தகைய தீவிபத்துகளை தடுக்க ஒரு வார காலத்துக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ரயில்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் 3 ஆண்டு  சிறைத் தண்டனையும், ரயில்களிலோ, ரயில் […]

Continue Reading

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தேதிக்கு 72 மணி நேரத்துக்கு முன்பும் பைக் பேரணிக்கு தடை

தேர்தல் தினத்தன்றும், தேர்தல் தினத்துக்கு முன்பாகவும், வாக்காளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த, சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் , பைக்குகளை பயன்படுத்துகின்றனர் என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்,  தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் தேதி அன்று அல்லது தேர்தல் தேதிக்கு 72 மணி நேரம் முன்பாக, பைக் பேரணிகளை அனுமதிக்க கூடாது என முடிவு செய்துள்ளது.  இது தொடர்பான அறிவுறுத்தல்கள், தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் https://eci.gov.in -லும் இந்த […]

Continue Reading

2ம் நாளாக பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம், 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று (பிப்ரவரி 25) முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில், திமுக ஆதரவு தொழிற்சங்கமாக தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் […]

Continue Reading

மதுரையில் மின்கசிவால் தீ விபத்து: எலக்ட்ரானிக்ஸ் கடைகள் சாம்பல்

மதுரையில் மின்கசிவால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக் கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில், பெருமாள் தெப்பகுளம் உள்ளது. இதை சுற்றிலும் ஏராளமான எலெக்ட்ரானிக் கடைகள் உள்ளன. நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்துக் கொண்டு, கடைகள் அடைக்கப்பட்டன. இரவு, 11:00 மணியளவில், அங்கிருந்த எலெக்ட்ரானிக் கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் […]

Continue Reading