சீன வைரஸ் – புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சீன வைரஸ் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 நோயாளிகளுக்காகவும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சுய பராமரிப்புக்கான ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுய பராமரிப்பு மற்றும் வீட்டு மேலாண்மை நடவடிக்கைகள் மீது இந்த வழிகாட்டுதல்கள் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளன. பண்டைய […]

Continue Reading

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கொரோனா தொற்றாளர்கள் கவனிக்க வேண்டியவை

கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அனைவரையும் மருத்துவமனைகளில் சேர்ப்பது என்பதோ, அனைவருக்கும் மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குவதோ சாத்தியமற்றது. எனவே , நோய்த்தொற்று உள்ளவர்கள் அவர்களது வயது, அறிகுறிகள் மற்றும் நோய்க்குறி, அவர்களுக்கு இருக்கும் இணை நோய்கள் ஆகியவற்றை வைத்து அறிவுப்பூர்வமான முறையில் வகைப்படுத்தும் வேலையை மருத்துவர்கள் செய்வார்கள். கொரோனாவின் சாதாரண அறிகுறிகள் மட்டும் இருப்பவர்களை அவர்களது இல்லங்களில் தனியாக கழிப்பறை வசதியுடன் கூடிய அறை இருப்பின், இல்லங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். […]

Continue Reading

மக்கள் நவீன வாழ்க்கைக்கு மாறினாலும் கழிப்பறை பயன்பாடு 100% இல்லை. அதிகாரிகள் வருத்தம்

மொபைல் பயன்பாடு உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் மாறிவிட்டன. ஆனால் அடிப்படை சுகாதாரத்திற்கான நல்ல பழக்க வழக்கங்களுக்கு மக்கள் இன்னமும் முழுமையாக மாறவில்லை. எல்லா வீடுகளிலும் கழிப்பறை இருந்தாலும் 100% பயன்பாடு இல்லை. பசுமை வீடு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கட்டித் தரப்படும் வீடு என அரசு வழங்கும் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளது. பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிக்காத ஊராட்சி […]

Continue Reading

இனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை… வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..!

பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளைக் காகிதமில்லாமல் நிறைவேற்றுவதற்காக இ-கையொப்பமிடும் ஆன்லைன் தளத்தை நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (NeSL) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் விரைவாக வளர்ந்து வரும் சூழலில் வாடகை ஒப்பந்தங்கள், பிரமாணப் பத்திரங்கள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதையும் அனைத்து தரப்பினரும் தொலை தூரத்திலிருந்தே ஆவணங்களில் முத்திரையிட்டுக் கையொப்பம் இடுவதற்கு, இந்த இ-கையொப்பம் சேவை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சேவை, ஒப்பந்தம் மேற்கொள்வோர் அதில் கையெழுத்திடுவதற்கோ அல்லது முத்திரையிடுவதற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது. இ-கையொப்பம் […]

Continue Reading

குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை சாப்பிடுவதால்.. எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

பச்சை பட்டாணி பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய காய்கறியாகும். இது பார்ப்பதற்கு பச்சை பசேலென்று அழகாக இருப்பதோடு, சுவைக்கவும் மென்மையாக இனிப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை அவித்து கொடுத்து வருவது நல்லது. இந்த பட்டாணியை வெயில் காலத்திலும் கிடைக்கும் வண்ணம் பதப்படுத்தி, காய வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சை பட்டாணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை எளிதாக சூப் வைத்துக் கூட நீங்கள் பருகி வரலாம். பாஸ்தா மற்றும் சாலட் போன்றவற்றில் கூட நீங்கள் இதை […]

Continue Reading

தமிழர் வளர்ந்தால் தானே தமிழும் வளரும்

“திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது நமது ஔவையார் வாக்கு. அந்த வாக்கிற்கு ஏற்ப, பணம் சம்பாதிக்க, எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். கடல் கடந்து வாணிபம் செய்து, நல்ல முறையில் பொருள் ஈட்டலாம் என்ற எண்ணம், இன்று நேற்று தோன்றியது அல்ல, பழங்காலத்தில் இருந்தே, தமிழகத்தில் இருந்து வருகின்றது. நமது நாட்டினரின் கப்பல் கட்டும் திறமைகளையும், அதை நிர்வகிக்கும் திறமையையும் வெளிநாட்டினர் நன்கு அறிந்து வைத்து இருந்தனர். நமது நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, 16 துறைமுகங்கள் […]

Continue Reading

காட்டில் பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமானது-பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியுடன் காட்டில் தேநீர் அருந்திய போது எடுத்த புகைப்படம், தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களுள் ஒன்று என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். காட்டுக்குள் சென்று உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்த பியர் கிரில்ஸின் ‘Man Vs Wild’ எனும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் மோடியுடன் இருக்கும் புகைப்படம் […]

Continue Reading

அன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்) !…

*உணவை வீணாக்க கூடாது – பசித்த போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம். *உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் – நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம். *அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் […]

Continue Reading

எல்ல நோய்களுக்கும், ஓர் இயற்கை மருந்து !…

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250 gmஓமம் – 100 gmகருஞ்சீரகம் – 50 gm.. மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.இக் கலவையை ஒரு ஸ்பூன் […]

Continue Reading

உயர்நீதிமன்ற இடைக்கால தடை !..ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் !..

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது.கண்ணன் என்பவர் முதல் பரிசும், கருப்பண்ணன் என்பவர் இரண்டாவது பரிசும், சக்தி என்பவர் மூன்றாம் பரிசு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற கருப்பண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.அதில், இந்த ஆண்டு அலங்காநல்லூரில் 244 எனும் எண்ணில் 11 மாடுகளை பிடித்தேன். ஆனால் இறுதி முடிவுகள் அறிவிக்கையில், கண்ணன் என்பவர் முதல் பரிசு பெற்றதாகவும், நான் இரண்டாவது பரிசு பெற்றதாகவும், […]

Continue Reading