அகரம் பவுண்டேசன் கணக்கு சோதனையில் மத்திய அமலாக்க துறை.! கோடி கணக்கில் ஹவாலா பணமா.?

நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் பவுன்டேசன் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உள்ள கணக்குகளை மத்திய அமலாக்கதுறை நீண்ட நாட்களாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான தி.நகரில் மற்றும் அடையாறில் உள்ள 3 வீட்டிலும் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் சூர்யாவின் தி.நகர் வீட்டில் கிலோ கணக்கில் நகைகள் கிடைத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

கைப்பற்றப்பட்ட நகை- பணம் மற்றும் ஆவணங்கள் பட்டியலை சூர்யாவிடம் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கிய பின்னர் அவை அனைத்தும் வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.மேலும் வருமான வாரிசோதனையில் நடிகர் சூர்யா 4 ஆண்டுகளுக்கு மேல் சரியாக வருமான வரி கணக்கை காட்டவில்லை. அவர்களிடம் ஏராளமான கறுப்பு பணம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்திருந்தனர்.

இந்த அதிரடி சோதனைக்கு பின் சூர்யா மீண்டும் தன் பக்கம் வருமான வரித்துறை வராமல் இருக்க முடிவெடுத்து ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம் பவுண்டேஷன் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீப காலமாக அகரம் பவுண்டேஷன் மீது பல்வேறு சந்தேகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகிறது, சூர்யா மனைவி ஜோதிகாவின் சகோதரி நக்மா ஏற்பாட்டில் மும்பையில் உள்ள ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் உலகில் பல்வேறு இடங்களில் இருந்து ஹவாலா பணம் அகரம் பவுடேஷன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது

மேலும் சென்னை திருவான்மியூரில் இருக்கும் நடிகர் சூர்யாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் பிரிமியம் கார்கள் விற்பனை ஷோ ரூம் உள்ளது, இங்கே சுமார் குறைந்தது ரூபாய் 50 லட்சத்துக்கு மேற்பட்ட விலையில் கார்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது, இங்கே சுமார் 125 கோடி வரை நஷ்ட கணக்கு காட்டி வரி ஏய்க்க பட்டுள்ளது சமீபத்தில் அமலாக்க துறையினரால் கண்டுபிடிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி முதலீடும் செய்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில் அகரம் பவுடேஷன் மூலம் வரும் ஹவாலா பணத்தை சினிமா துறையில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது, மேலும் வெளிநாட்டில் உள்ள சில அமைப்புகள் உடன் தொடர்பில் இருக்கும் அகரம் பவுண்டேசன் தொடங்கியதில் இருந்து தற்போது வரை அமலாக்கதுறை சோதனை செய்ததில் பல முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைத்துள்ளதாக தெரிகிறது, சமீபத்தில் கேரளாவில் தங்க கடத்தலில் சிக்கிய சப்னா சுரேஷ் அந்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துவந்தது குறிப்பிடத்தக்கது, அதே போன்று அகரம் பவுண்டேசன் மூலம் வரும் ஹவாலா பணத்தில் நடிகர் சூர்யா சினிமாவில் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்த தகவல்களையும் மத்திய அமலாக்க துறை மற்றும் வருமான வரித்துறை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருட்டு திராவிட மாமா சவுக்கு சங்கர்.! நடிகை கஸ்துரியிடம் அநாகரிகமாக பதிலளித்து அசிங்கப்பட்ட சவுக்கு சங்கர்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *