பெட்ரோல் விலை மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசின் நடவடிக்கை: அமைச்சர் வி.கே.சிங் பேட்டி

அரசியல்

மதுரையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த திர அறக்கட்டளை |சார்பாக ராம ரத யாத்திரை நேற்று தொடங்கி வைக்க வந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங்பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது…

VK Singh: Former army chief proves his mettle in political battlefield |  What you need to know - FYI News

இன்று ஒரு முக்கியமான நாள் ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் சிறுவர்கள், பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியை முன்வந்து அளிக்கின்றனர் மேலும், ராமர் ஆலயம் கட்டப்படுவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ராமர் ஆலயம் கட்டபடுவதோடு  ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப்படும். தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது.பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஆனது.

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.கடந்த 2011 – 2014 ஆகிய ஆண்டுகளில் கேஸ் விலை ஆயிரத்து 240 ஆக இருந்தது. தற்போது 750 என்ற அளவில்தான் உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘

GST Council to rationalise rates for cellphones, footwear, textiles on  March 14

இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனையில் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது.மேலும்,  இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *