தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்து இரு நாட்களுக்கு 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

South, central Mumbai record over 100 mm rainfall in 24 hours; suburbs get  light rain - mumbai news - Hindustan Times

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், குமரிக்கடலுக்கு அருகில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிக்கிறது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணம்பூண்டியில் 17 செ.மீட்டரும், திருக்கோவிலூரில் 16 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடுமென அவர் குறிப்பிட்டார். தமிழத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் இயல்பை விட 8 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதி வரை பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *